March 7, 2017 தண்டோரா குழு
பணம் செலுத்துவதற்குக் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற முடிவைக் கைவிட வேண்டும் என்று பாரத ஸ்டேட் வங்கிக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சேமிப்பு கணக்கில் குறைந்த பட்சம் ரூபாய் 5 ஆயிரம் இருப்புத்தொகை வைத்திருக்க வேண்டும். அவ்வாறு வைத்திருக்காமல் உள்ளவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று பாரத ஸ்டேட் வங்கி அறிவித்திருந்தது.
அத்துடன், நகர்ப்புறங்களில் வசிப்பவர்களுடைய வங்கி கணக்கில் ரூபாய் 3 ஆயிரமும், கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் ரூபாய் ஆயிரமும், புறநகர் பகுதியில் வசிப்பவர்கள் ரூபாய் 2 ஆயிரமும் சேமிப்புக் கணக்கில் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் அபராதம் வசூலிக்கப்படும் என்று அறிக்கை விடுத்திருந்தது.
இதனால் வாடிக்கையாளர்கள் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். இந்த அறிவிப்பு மக்களிடம் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. மேலும், அதில் சேமிப்பு வைத்திருக்கும் சுமார் 31 கோடி பேருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இதையடுத்து, இந்த திட்டத்தை குறித்து ஸ்டேட் பேங்க் மறுபரிசிலனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.