• Download mobile app
29 Nov 2024, FridayEdition - 3215
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

எஸ்பிஐ வங்கி, இந்திய ராணுவம் புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுப்பிப்பு !

December 17, 2021 தண்டோரா குழு

இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி இந்திய ராணுவத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை புதுப்பித்து கொண்டது. சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பலன்கள் மற்றும் சிறப்பம்சங்கள் ஆகியவற்றின் தொகுப்புகளை, அவர்களது பாதுகாப்பு படை சம்பள தொகுப்பு வாயிலாக, பணியிலிருப்பவர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்குகிறது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் ராணுவம் மற்றும் வங்கியைச் சார்ந்த வந்திருந்த மூத்த அதிகாரிகள் முன்னிலையில் டெல்லியில் கையெழுத்தானது.இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், தனிப்பட்ட விபத்து காப்பீடு (இறப்பு) மற்றும் விமான விபத்து காப்பீடு (இறப்பு) உள்ளடக்கிய நீட்டிக்கப்பட்ட பலன்களை எஸ்பிஐ இலவசமாக வழங்குகிறது.கூடுதலாக, பணியின் போது இறக்க நேரிட்டால், நிரந்தரமாக மொத்தமாக குறிப்பிட்ட பகுதியாக ஊனமடைந்தால் அதற்கான பலன்களையும் வழங்குகிறது.உயிரிழந்த ராணுவ ஊழியர்களின் பெண் குழந்தைகளின் திருமணம் மற்றும் குழந்தைகளின் கல்வி செலவுகளுக்கும் இது உதவுகிறது.

மேலும், வயது தடையின்றி, முன்னாள் ராணுவ வீரர்கள் அனைவரும் இலவச தனிநபர் விபத்து காப்பீடு (இறப்பு) திட்டத்துக்கு தகுதி பெறுகிறார்கள்.இதே போல, ராணுவ ஊழியர்களின் சேவை மற்றும் நாட்டை நிர்மாணிப்பதில் அவர்களின் பங்களிப்புக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், சேவை கட்டணத்தில் தள்ளுபடி மற்றும் பல்வேறு இலவச பலன்களுடன் கூடிய பூஜ்ய இருப்பு வங்கி சேமிப்பு கணக்கு சேவையையும் வழங்குகிறது. மேலும் பணியில் உள்ள ஊழியர்களுக்கான வீட்டு கடன், கார் கடன், கல்வி கடன் மற்றும் எக்ஸ்பிரஸ் கிரெடிட் தனிநபர் கடன் ஆகியவற்றிற்கு செயல்பாட்டு கட்டணத்தில் சலுகை மற்றும் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களையும் அளிக்கிறது.

இந்த சிறப்பு வாய்ந்த நிகழ்வில், எஸ்பிஐ வங்கியின் தலைவர் ஸ்ரீ தினேஷ் காரா கூறுகையில்,

“இந்திய ராணுவத்துடன் இணைவதில் எங்களுக்கு பெருமையும் கௌரவமும் ஆகும். நமது நாட்டின் மற்றும் குடிமக்களின் பாதுகாப்புக்காக தங்களின் இன்னுயிரை அர்ப்பணிக்கும் ராணுவ ஊழியர்களுடன் இணைந்திருப்பதற்கு சிறப்பாக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதில் நாங்கள் எப்போதும் நம்பிக்கை கொண்டுள்ளோம். ராணுவ வீரர்களுக்கு அதன் பாதுகாப்பு துறை சம்பள தொகுப்பு (ராணுவம்) வாயிலாக, சிறப்பாக உருவாக்கப்பட்ட பலன்களின் தொகுப்பை எஸ்பிஐ பணிவுடன் வழங்குகிறது. இது வங்கியின் வசதிகளை அவர்களும் அவர்களது குடும்பத்தினரும் எளிதாக பெறுவதை உறுதி செய்கிறது”.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பணியிலிருக்கும் ராணுவ வீரர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்களின் தேவைகளுக்கு சிறப்பாக பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு படையினர் மீதான வங்கியின் ஈடுபாட்டின் ஒரு பகுதியாக, பாதுகாப்புத் துறை சம்பள தொகுப்பின் கீழ் உள்ள அனைத்து ராணுவ வீரர்களுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பலன்களை எஸ்பிஐ தானாகவே நீட்டித்து வழங்கும்.

தற்செயலாக, இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த 8 பேரின் உறவினர்களை வங்கி அணுகி, எஸ்பிஐயின் பாதுகாப்பு படை சம்பள தொகுப்பு திட்டத்தின் கீழ் கிடைக்கக் கூடிய காப்பீட்டு கோரிக்கைகளை 24 மணி நேரத்துக்குள் காப்பீட்டு நிறுவனங்கள் மூலமாக கிடைப்பதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தது. முன்னதாக, சட்டீஸ்கரில் உள்ள சன்காயிட் என்ற இடத்தில் மேற்கொள்ளப்பட்ட நக்ஸல் தாக்குதல், கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதல் மற்றும் புல்வாமா தாக்குதல் ஆகியவற்றிலும் உயிர் தியாகம் செய்த பாதுகாப்பு படை வீரர்களின் குடும்பத்தினருக்கான காப்பீட்டு கோரிக்கைகளையும் எஸ்பிஐ அதன் பாதுகாப்பு படை சம்பள தொகுப்பு திட்டத்தின் கீழ் ஒரே நாளில் பூர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் படிக்க