• Download mobile app
08 Sep 2024, SundayEdition - 3133
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஏஆர்எஸ் டிஎம்டி கம்பிகள் விளம்பர தூதராக கிரிக்கெட் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்

July 10, 2024 தண்டோரா குழு

தென்னிந்தியாவில் டிஎம்டி கம்பிகள் விற்பனை சந்தையில் சிறப்பான வளர்ச்சி கண்டு வரும் ஏஆர்எஸ் ஸ்டீல்ஸ் நிறுவனம் தனது புதிய துருப்பிடிக்காத அரிப்பு எதிர்ப்பு ARS CRS 550D ஸ்டீல் கம்பிகளுக்கான விளம்பர தூதராக இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டை நியமித்துள்ளது.

ஏஆர்எஸ் ஸ்டீல்ஸ் நிறுவனம், தமிழக சந்தைகளில், நற்பெயருடன் சிறந்த பிராண்டாக திகழ்வதோடு வாடிக்கையாளர்கள் இடையே தரத்திற்கான உத்தரவாதமிக்க பிராண்டாகவும் விளங்கி வருகிறது. கடந்த 46 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் இக்குழுமம் தமிழகத்தில் தரமான மற்றும் உறுதியான 550D ஸ்டீல் கம்பிகளை அறிமுகம் செய்தது. ஏஆர்எஸ் நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து ஸ்டீல்களையும் ,சுவிட்சர்லாந்தின் சொசைட்டி ஜெனரல் டி சர்வைலன்ஸ் நிறுவனம் தர சோதனைகள் செய்து , ஒவ்வொரு ஸ்டீல் தொகுப்புகளுக்கும் SGS தரச் சான்றுதழை வழங்குகிறது

இதுகுறித்து ஏஆர்எஸ் ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அஸ்வனி குமார் பாட்டியா கூறுகையில்,

எங்களின் புதிய QR-குறியீடு அடிப்படையிலான தரக் கண்காணிப்பு அறிமுகத்தின் மூலம் நுகர்வோர் ஸ்டீல் கம்பிகளை வாங்கும் முறையை நாங்கள் மாற்றியுள்ளோம். இது தவிர, எங்கள் ஸ்டீல் பேட்ரோல் தொழில்நுட்ப வேன் கட்டுமானங்கள் நடைபெறும் இடங்களுக்கு நேரடியாக சென்று ஸ்டீலின் தரத்தை இலவசமாக பரிசோதனை செய்து வருகிறது.இவை எங்கள் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும் பாட்டியா கூறுகையில், டிஎம்டி கம்பிகளை வாங்கும் வாடிக்கையாளர்கள் கண்மூடித்தனமாக வாங்குவதை நிறுத்தவும், சோதனை அறிக்கைகளை சரிபார்த்து வாங்கவும்.வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் கடந்த ஆண்டு “உண்மையை அறிவோம்” பிரச்சாரத்தை நாங்கள் துவக்கினோம். இதன் மூலம் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஸ்டீல் வாங்குவதற்கான புதிய வழியை தீவிரமாக ஊக்குவித்து வருகிறோம்.

இந்த பிரச்சாரத்தின் தொடர்ச்சியாக, ஏஆர்எஸ் ஸ்டீலின் பிராண்ட் தூதராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். ராகுல் டிராவிட் தனது தனித்துவமிக்க தலைமை மற்றும் விளையாட்டில் நிபுணத்துவம் ஆகியவற்றின் காரணமாக அனைவரிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றவர் . இதன் காரணமாக எங்கள் பிராண்டின் நோக்கத்துடன் அவர் பொருந்துவதால் அவரை நாங்கள் எங்களின் பிராண்ட் தூதராக நியமித்துள்ளோம் என்று செயல்-இயக்குனர், ஏஆர்எஸ் ஸ்டீல்ஸ் ராஜேஷ் பாட்டியா தெரிவித்தார்.

இந்நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ARS CRS 550D டிஎம்டி கம்பிகளை அறிமுகப்படுத்தும் விளம்பரத்தில் ராகுல் டிராவிட் இடம்பெற்றுள்ளார். இது சுற்றுச்சூழலால் ஏற்படும் பாதிப்பை எதிர்க்கும் வகையில் மைக்ரோ-அலாய்களைக் கொண்ட அரிப்பு-எதிர்ப்பு ஸ்டீல் கம்பி ஆகும். இது தண்ணீரில் உப்புத்தன்மை அதிகமாக உள்ள பகுதிகளுக்கு மிகவும் பொருத்தமானது என்று இப்போது தனி வீடு கட்டுபவர்கள், கட்டுமான நிறுவனங்கள், கட்டுமான பொறியாளர்கள் அதிக அளவில் வாங்குகின்றனர். இந்த விளம்பரம் தொலைக்காட்சி மற்றும் அனைத்து டிஜிட்டல் தளங்களில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

மேலும் படிக்க