• Download mobile app
18 Oct 2024, FridayEdition - 3173
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஏஐஎஸ் -125 டைப் சி தரக் குறியீடுகளுக்கு இணங்க கட்டமைக்கப்பட்ட இசுஸு டி- மேக்ஸ் ஆம்புலன்ஸ் வாகனம் இசுஸூ மோட்டார்ஸ் இந்தியா அறிமுகம்

October 18, 2024 தண்டோரா குழு

ஏஐஎஸ் -125 டைப் சி தரக் குறியீடுகளுக்கு இணங்க முழுமையாக கட்டமைக்கப்பட்ட இசுஸு டி- மேக்ஸ் ஆம்புலன்ஸ் வாகனம் அறிமுகப்படுத்தபடுவதை அறிவிப்பதில் இசுஸூ மோட்டார்ஸ் இந்தியா பெருமிதம் கொள்கிறது.

இந்த முன்னோடி ஆம்புலன்ஸ் நோயாளிகளை கொண்டு செல்வதில் ஈடு இணையற்ற நம்பகத்தன்மை, பாதுகாப்பு மற்றும் வசதிகளை வழங்கி அவசர் மருத்துவ சிகிச்சை சேவைகளில் ஒரு புதிய வரையறையை நிர்ணயிக்கும் அதே நேரத்தில்,எதிர்வினையாற்றுவதில் அதிவிரைவாக செயல்படுவதை உறுதி செய்ய முழு ஆற்றல் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இசுஸு வின் நிரூபிக்கப்பட்ட தொழில் நுட்பத் திறன் மற்றும் ஆரோக்கியப் பராமரிப்பு வழங்குனர்களின் தேவை குறித்த ஆழமான புரிதல் ஆகியவற்றுடன் இந்தியாவுக்கேன்றே வடிவமைக்கப்பட்ட இந்தப் புதிய இசுஸு டி- மேக்ஸ் ஆம்புலன்ஸ் இந்தப் பிரிவிலேயே மிகச் சிறந்த 14 சிறப்பம்சங்களுடன் நாட்டின் “ பேசிக் லைஃப் சப்போர்ட்’ ஆம்புலன்ஸ்களின் புதிய ஒரு சகாப்த்த்தை துவங்கி வைத்திருக்கிறது.

”.இந்த அறிமுகம் குறித்து கருத்துத் தெரிவித்த இசுஸு மோட்டார்ஸ் இந்தியா டெபுடி மேனேஜிங் டைரக்டர். டோருகிஷிமோடோ கூறுகையில்,

“இந்தப் பிரிவிலேயே மிகச் சிறந்த 14 சிறப்பம்சங்களுடன் இந்திய சந்தைக்காக வடிவமைக்கப்பட் டஎங்களின்த னித்துவம் வாய்ந்த தயாரிப்பான இசுஸு டி-மேக்ஸ் ஆம்புலன்ஸ் வாகனத்தை வழங்குவதில் நாங்கள் மிகவும் உற்சாகம் அடைந்துள்ளோம்.புதிய இசுஸு டி- மேக்ஸ் ஆம்புலன்ஸ், ஏஐஎஸ் –125 டைப் சி ஆம்புலன்ஸின் கீழ் வரையறுக்கப்பட்ட தரக்குறியீடுகளுக்கு இணங்க, உயர்தர கட்டமைப்பு மற்றும் ஈடு இணையில்லாத வலிமையை வழங்கி இந்த மதிப்பீடுகளை முன்னெடுத்துச் செல்கிறது.

எங்களது‘ இசுஸு டி- மேக்ஸ் ஆம்புலன்ஸ்’, ‘பேசிக் லைஃப் சப்போர்ட்’ ஆம்புலன்ஸ் பிரிவில் ஒரு புதிய பெஞ்ச் மார்க்கை நிறுவும் என்று நாங்கள் உறுதியாக நபுகிறோம்”.ஒரு வலிமை மிக்க இசுஸு ஐ கிரிப் தளத்தின் மேல் கட்டமைக்கப்பட்ட டி- மேக்ஸ் ஆம்புலன்ஸ் வாகனம் நகர்ப்புற மற்றும் கிராமப்புற சாலைகளின் இருவேறு நிலைகளுக்கும் உகந்ததாக வலிமையோடும் நிலைத்தன்மை கொண்டதாகவும் இருக்கச் செய்கிறது.

இந்தப் பிரிவிலேயே மிகச் சிறந்த இதன் டபுள் விஷ்போன் கொண்ட அதிகளவு பயன்பாட்டுக்கு ஈடு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஹை-ரைடு சஸ்பென்ஷன் வலுவான எஸ் யூ வி போன்ற சஸ்பென்ஷன் அமைப்பை வழங்குவதோடு அனைத்து பயணிகளுக்கும் சிறந்த கேபின் வசதியை வழங்குகிறது. இந்தப் பிரிவின் மற்ற இதர மிகச் சிறந்த அம்சங்களாக விளங்கும் இதன் குறுகிய வீல்-பேஸ்,மேம்பட்ட கிரவுண்ட் கிளியரன்ஸ், கிரேடபிளிட்டி,பெரியடயர்கள் மற்றும் சிறிய டர்னிங் சர்க்கிள்ரேடியஸ் போன்றவை., நெரிசல் நிறைந்த நகர்ப்புற, பகுதியளவு நகர அமைப்பு கொண்ட பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களை விரைந்து சென்றடையும் வகையில் மிகவும் எளிதாக லாகவமாக கையாளக்கூடிய ஒன்றாக இசுஸு டி- மேக்ஸ் ஆம்புலன்ஸை விளங்கச் செய்கிறது. இசுஸு டி- மேக்ஸ் ஆம்புலன்ஸ் ரூ. 25,99,990/-,/- எக்ஸ்.ஷோரூம் தொடக்க விலையில் வருகிறது.

மேலும் படிக்க