• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஏஜிஎஸ் ஹெல்த் கேர் மையத்தில் 3-நாள் இலவச மாஸ்டர் ஹெல்த் செக் அப் முகாம் துவக்கம்

April 7, 2023 தண்டோரா குழு

உலக சுகாதார அமைப்பு (WHO) சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7ம் தேதி உலக சுகாதார தினம் கொண்டாடப்படும். இந்த ஆண்டு உலக சுகாதார அமைப்பின் 75-வது ஆண்டு விழா வாக இருப்பதால் அதை சிறப்பாக கொண்டாடும் வகையில் கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள ஏஜிஎஸ் ஹெல்த் கேர் & மாஸ்டர் ஹெல்த் செக் அப் மையம் சார்பில் 3-நாள் இலவச மாஸ்டர் ஹெல்த் செக் அப் முகாம் தொடங்கப்பட்டது.

இந்த முகாமை, ஏஜிஎஸ் ஹெல்த் கேர் & மாஸ்டர் ஹெல்த் செக் அப் மையத்தின் இயக்குனர் டாக்டர் ஆதித்யன் குகன் முன்னிலையில் கோவை வணிக வரித்துறை இணை ஆணையர் காயத்ரி கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் துவக்கி வைத்தார்.இந்த நிகழ்வுக்கு பிரபல மருத்துவர், டாக்டர் சித்ரா குகன் மற்றும் தி தோல் ஸ்கின் கிளினிக்கின் இயக்குனர் டாக்டர் ஜனனி ஆதித்யன் கலந்து கொண்டனர்.

இந்த இலவச மாஸ்டர் ஹெல்த் செக் அப் முகாம் குறித்து டாக்டர் ஆதித்யன் குகன் பேசுகையில்:-

2023-ஆம் ஆண்டு உலக சுகாதார தினத்தின் கருப்பொருள் ‘அனைவருக்கும் ஆரோக்கியம்’ (Health For All) என்பதாக இருக்கிறது. இந்த சிறப்பான தருணத்தில் எங்கள் மையம் சார்பில் நாங்கள் ஏப்ரல் 7 முதல் 9 வரை தினமும் 50பேருக்கு ரூ. 2,500 மதிப்புள்ள மாஸ்டர் ஹெல்த் செக் அப் பரிசோதனைகளை இலவசமாக வழங்குகிறோம்.இந்த சலுகை பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு, கொரோனா பெருந்தொற்று காலத்தில் முன்கள பனி செய்த சாய்பாபா காலனி மற்றும் ஆர்.எஸ். புரம் பகுதி காவல் நிலைய அதிகாரிகளுக்கு வழங்க வழிமுறை செய்துள்ளோம்.

இந்த இலவச பரிசோதனையில் பல ஆய்வுகள் அடங்கும், உதாரணத்திற்கு இரத்த பரிசோதனைகள், சிறு நீர் பரிசோதனை, இசிஜி ஆகியவற்றுடன் சர்க்கரை நோய், சிறுநீரக நோய் ஆகியவற்றுக்கான ஆலோசனைகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர் காயத்ரி கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் பேசுகையில், ஒருவருக்குள்ள நோயை முன்கூட்டியே கண்டறிந்து கொண்டால் அதனால் ஏற்படக்கூடிய உடல் ரீதியான சவால்களையும் பொருளாதார ரீதியான அழுத்தங்களையும் அவரால் குறைத்துக்கொள்ள முடியும்.

ஏழை மக்கள் பயன்படக்கூடிய இப்படிபட்ட முயற்சியை எடுத்த டாக்டர் ஆதித்யன் குகன் அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன் என்று கூறினார்.

மேலும் படிக்க