August 1, 2017
தண்டோரா குழு
அமெரிக்காவில், ஏர் இந்தியா ஊழியர்கள் தங்கும் அறையில் பேய் இருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள ஒரு விடுதியில் ஏர் இந்தியா ஊழியர்கள் கடந்த நவம்பர் மாதம் முதல் தங்கியுள்ளனர். இந்த விடுதியின் அறைகளில் விசித்திரமான ஒலிகளும், வாசனைகளும் வருவதாகவும், ஒளிவிளக்குகள் அடிக்கடி மின்னுவதாகவும், கதவுகள், ஜன்னல்கள் தானாக திறந்து மூடுவதாகவும், ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சிகாகோ ஓட்டல் நிறுவனத்திடம் இந்த சம்பவம் குறித்து கேட்டுள்ளோம் என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.