June 23, 2023 தண்டோரா குழு
ஏழு ஆண்டுகளுக்கு பின், ‘தி கிரேட் பாம்பே சர்க்கஸ்’, கோவை வ.உ.சி., மைதானத்தில் இன்று முதல் துவங்கியது. இதனை ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி முகமது ஜியாவுதீன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். உடன் நேரு கல்வி குழுமத்தின் இயக்குனர் முரளி மற்றும் சர்க்கஸ் நிறுவனத்தின் பங்குதாரர்கள் உடனிருந்தனர்.
சர்க்கஸ் நிறுவனத்தின் பங்குதாரர் சஞ்சீவ் கூறியதாவது:
எங்கள் சர்க்கஸ் நிகழ்ச்சி, ஒரு மாதத்துக்கும் மேல் நடைபெற உள்ளது. ஒவ்வொரு நாளும் மதியம், 2:00 மணி, மாலை, 4:00 மணி, இரவு, 7:00 மணி என, மூன்று காட்சிகள் நடத்தப்படும். ‘கிளப் ஜக்லிங்க்’, ‘ரோலர் ஆக்ட்’, ‘ஜிம்னாஸ்டிக் கன்டேஜியன்’,’டவர் பாஸ்கெட்பால்’,’ஜக்காரியன் டியோ ஆக்ட்’, ‘கண்டார்சன்’ உள்ளிட்ட பல்வேறு சாகசங்கள் இடம் பெற உள்ளன.
ஒவ்வொரு காட்சியும்,2 மணி நேரம், 20 நிமிடம் நடைபெறும். 30க்கும் மேற்பட்ட சாகசங்கள் நடக்கவுள்ளன. டிக்கெட் விலை ரூ.100 முதல் ரூ.400 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரூ.400 டிக்கெட்டுகளுக்கு, தொலைபேசி வாயிலாக, முன்பதிவு செய்து கொள்ளலாம். ரூ.100, 200, 300 டிக்கெட் விலையில் பார்க்க விரும்பும் மக்கள்,அரை மணி நேரத்துக்கு முன், மைதானத்துக்கு வந்து பெற்றுக் கொள்ளலாம். விவரங்களுக்கு, 87788 38082, 87142 85256 என்ற எண்களில் அழைக்கலாம், என்றார்.