September 13, 2024
தண்டோரா குழு
கோவை அருகே உள்ளநவக்கரை ஏஜேகே கலை அறிவியல் கல்லூரியில் இன்று (வெள்ளிக்கிழமை) ஓணம் பண்டிகை விழாமாணவ மாணவிகளால் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அதை ஒட்டி கல்லூரி வளாகம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு பூக்கோலங்கள் அனைவரதுகண்ணை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஓணம் கூத்து என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த ஓணம் பண்டிகையில் சிறப்பு நிகழ்ச்சியாக மகாபலி சக்கரவர்த்தி போல் வேடம் அணிந்தவரை நபரை ஹெலிகாப்டரில் செண்டை மேளம் முழங்க அழைத்து வரப்பட்டார் அப்போது மாணவ மாணவிகள் கரகோஷம் எழுப்பி வரவேற்றனர்.
முன்னதாக நடைபெற்ற விழாவில் ஏ.ஜே.கே கல்லூரி செயலாளர் அஜித் குமார் லால், இயக்குனர் பேராசியர் பிந்து அஜித் குமார் லால் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். அதைத்தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.