June 29, 2017
தண்டோரா குழு
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 9 அமைச்சர்கள் அகமதாபாத் நிர்வாக மேலாண்மை(IIMA) நிறுவனத்தில் Management and Leadership பாடங்களை படிக்க உள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 9 வெவ்வேறு துறை அமைச்சர்கள் தேர்தலுக்கு முன் அவர்கள் வாக்களித்த வாக்குறிதிகளை நிறைவேற்றும்படி, அகமதாபாத் நிர்வாக மேலாண்மை நிறுவனத்தில் சேர்ந்து Management and Leadership பாடங்களை கற்பதற்காக அங்கு வந்துள்ளனர்.
Management and Leadership for Good Governance என்னும் மூன்று நாள் நிகழ்ச்சியில் கல்வி, நல்வாழ்வு, கூட்டுறவு இயக்கம், சுகாதாரம் மற்றும் பொது-தனியார் கூட்டு ஆகிய பாடங்களை ஐஐஎம்ஏ ஆசிரியர்கள் கலந்துரையாடல் மூலம் மந்திரிகளுக்கு கற்று தருவார்கள்.
இது குறித்து நகர்புற வளர்ச்சி அமைச்சர் சி.பி சிங் கூறுகையில்,
“தேர்தலுக்கு முன் நாங்கள் பல வாக்குறுதிகளை தருகிறோம். ஆனால், வளங்கள் குறைவாக இருப்பதால், அதிகாரத்திற்கு வந்த பிறகு, நாங்கள் தந்த வாக்குறுதிகளில் நிறைவேற்ற சில முன்னுரிமைகளை அமைக்க வேண்டியுள்ளது.இங்கு வந்து புதிய முறைகளை கற்றுக்கொண்டு, மாநிலத்துக்கு உதவுவதற்காக பல பயனுள்ள கொள்கைகளை முன்னெடுக்க உதவும் என்று கருதுகிறேன்.
முன்பாக, மக்கள் மாநில அரசிடமிருந்து அதிகமாக எதுவும் எதிர்ப்பார்க்கமாட்டார்கள். ஆனால், தற்போது மாநிலத்திலும் மத்திய அரசிலும் பா.ஜ.கா பதவியில் இருப்பதால், மக்களுடைய எதிர்ப்பார்ப்பு அதிகமாக இருக்கிறது” என்றார்.
(IIMA) பயில உள்ள அமைச்சர்களின் விபரம் பின்வருமாறு:
1.வருவாய் அமைச்சர்: அமர் குமார் பவார்.
2.குடிநீர், சுகாதாரம், நீர் வளத்துறை அமைச்சர்: சந்திர பிரகாஷ் சௌத்ரி.
3.நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர்: சி.பி சிங்.
4.குழந்தை வளர்ச்சி மற்றும் சமூக நல அமைச்சர்: லூயிஸ் மராண்டி.
5.மனித வள மேம்பாட்டு அமைச்சர் நீரா யாதவ்.
6.கிராம மேம்பாட்டு அமைச்சர்: நிக்சன் சிங் முண்டா.
7.சுகாதார, மருத்துவ கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்: ராம்சந்திர சந்திரவன்ஷி.
8.உழைப்பு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி அமைச்சர்: ராஜ் பாலிவர் .
9.உணவு, பொது விநியோகம் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சர்: சாரி ராய்