October 6, 2017
அணு ஆயுதங்களை ஒழிக்கும் அமைப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
2017-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகிறது. மருத்துவம், இலக்கியம், வேதியியல் ஆகிய பிரிவுகளைத் தொடர்ந்து இன்று அமைதிக்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட்டது.
இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கும் நிகழ்ச்சி நார்வே நாட்டில் நடந்தது. அதில்,அணு ஆயுதங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் ‘ஐகேன்’ அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்க்கப்பட்டுள்ளது.
10 வருடங்களுக்கு முன்னர், ஆஸ்திரேலியாவில் தொடங்கப்பட்டஐகேன்’ (ICAN -International Campaign to Abolish Nuclear Weapons)அமைப்பு தொடர்ந்து அணு ஆயுதங்களுக்கு எதிராகப் போராடி வருகிறது.தற்போது ஜெனீவாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவருகிறது.