June 1, 2017 தண்டோரா குழு
ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை தலைவராக ஸ்லோவேகியா நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் மிரோஸ்லாவ் லாஜ்காக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐக்கிய நாடு பொதுச்சபை ஐக்கிய நாடுகளின் முக்கிய அங்கங்களில் ஒன்றாகும். ஐக்கிய நாடுகளின் வரவு செலவுகளை கண்காணிக்கவும், நிரந்தரம் அல்லாத நாடுகளின் உறுப்பினர்களை பாதுகாப்பு சபைக்கு தேர்ந்தெடுப்பதும், நாடுகளுக்கிடையில் நட்பான உறவை பாதிக்கும் எந்த ஒரு சூழ்நிலையிலும் சமாதான தீர்வு காண பரிந்துரை செய்வதும் இந்த சபையின் சில முக்கிய கடமைகளாகும்.
இந்த சபையின் 72வது கூட்டம் வரும் செப்டம்பர் மாதம், நடைபெறவுள்ளது. இந்த சபையின் தற்போதய பொதுச்சபை தலைவர் பீட்டர் தாம்சனுடைய பதவிக்காலம் செப்டம்பர் மாதத்தில் முடிவடைகிறது. இதையடுத்து ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை தலைவராக ஸ்லோவேகியா நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் மிரோஸ்லாவ் லாஜ்காக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து ஐநாவின் செயலாளர் ஜெனரல் அண்டோனியோ கட்டர்ரேஸ் கூறுகையில்,
“மிரோஸ்லாவ் லாஜ்காக் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை தலைவராக தேர்வுசெய்யப்பட்டது மகிழ்ச்சியை அளிக்கிறது. அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். விரையில் இந்த பதவியிலிருந்து விலகும் பீட்டர் தாம்சனுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். மிரோஸ்லாவ் லாஜ்காக் ஐக்கிய நாடுகளின் நடவடிக்கைகளின் அனைத்து அம்சம்களுக்கும் ஒரு வியக்கத்தக்க கட்டளையை எப்பொழுதும் தருவார். எங்கள் பணியை நிர்வகிக்கும் அனைத்து கொள்கைகளுக்கும் வலுவான அர்ப்பணிப்பு அவரிடம் உண்டு” என்றார்.