• Download mobile app
30 Nov 2024, SaturdayEdition - 3216
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஐசிஐசிஐ வங்கி, அமேசான்.இன் மின்னணு வர்த்தக தளத்தில் பதிவு செய்திருக்கும் விற்பனையாளர்களுக்கு இன்ஸ்டாஓடி சலுகை திட்டம்

September 29, 2021 தண்டோரா குழு

ஐசிஐசிஐ வங்கி, அமேசான் இ-காமர்ஸ் நிறுவனத்தின் ஆன்லைன் சந்தை www.amazon.in-ல் பதிவு செய்திருக்கும் தனிநபர் விற்பனையாளர்களுக்கும்,சிறிய வர்த்தகங்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் மிகைப் பற்று அளிக்கும் வசதி தொடர்பாக அமேசான் இந்தியாவுடன் கைகோர்க்க உள்ளதாக அறிவித்துள்ளது.

விற்பனையாளர்கள் தங்களது பொருள்களை இ-காமர்ஸ் தளத்தில் விற்பனை செய்வதற்கு உடனடியாகவும், டிஜிட்டல் வாயிலாகவும் ரூ.25 லட்சம் வரை மிகைப் பற்று (OD) வசதியை பெற இயலும் என்றும் அறிவித்துள்ளது. ஒருங்கிணைந்த விண்ணப்ப டிஜிட்டல் இயங்குதளம் (API integration) வாயிலாக, இந்த கூட்டு செயல்பாட்டின் மூலம் விற்பனையாளர்கள் வங்கியிலிருந்து மிகைப் பற்று பெறலாம்.இதற்கான நடைமுறையில், விண்ணப்பம் வழங்குவதிலிருந்து அனுமதி பெற்று பண பரிவர்த்தனை வரையிலும் அனைத்தும் முற்றிலும் டிஜிட்டல் வடிவத்திலேயே நடைபெறும்.மேலும் இதர வங்கிகளின் வாடிக்கையாளர்களும் அமேசான்.இன் வர்த்தக தளத்தில் பதிவு செய்திருக்கும் விற்பனையாளர்களாக இருந்தால், இந்த ஒடி வசதியை ஐசிஐசிஐ வங்கியிலிருந்து பெற்று பயனடைய முடியும்.

கடன் பெறும் தகுதியினை மதிப்பீடு செய்ய, இத்துறையிலேயே முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ள தானியங்கி மதிப்பீட்டு புள்ளிகள் தொழில் நுட்பத்தின் வாயிலாக உடனடியாக மதிப்பீடு செய்யப்படுவதன் வாயிலாக இந்த புதிய வசதி அளிக்கப்படுகிறது. கிரெடிட் பீரோவில் விற்பனையாளர்களுக்குள்ள புள்ளிகளோடு அவர்களின் பல்வேறு தகுதிகளையும் மேம்பட்ட தரவு பகுப்பாய்வுகளை பயன்படுத்தி ஆய்வு செய்யும் வசதிகளை வங்கி கொண்டுள்ளது.

இந்த புதிய கடன் மதிப்பீட்டு முறையானது வங்கி ஆவணங்கள் மற்றும் வருமான வரி சான்றுகளைக் கொண்டு கடன் மதிப்பீடு செய்யும் மரபான முறையிலிருந்து விடுவித்து விற்பனையாளர்களுக்கு இலகுவான வழிமுறையை அளிக்கிறது.மேலும்,புதிதாக கடன் பெறும் தனிநபர் விற்பனையாளர்கள் மற்றும் சிறு வர்த்தக நிறுவனங்கள், ஏற்கனவே கடன்பெற்ற சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களின் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் மதிப்புகள் மூலம் உடனடியாக கடனுதவி பெற வாய்ப்பளிக்கிறது.

ஐசிஐசிஐ வங்கியில் நடப்பு கணக்கு வைத்திருக்கும் விற்பனையாளர்கள் தங்களது செயல்பாட்டு மூலதன தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள இந்த மிகைப் பற்று வசதியை உடனயாக பயன்படுத்திக் கொள்ள முடியும். டிஜிட்டல் முறையில் ஐசிஐசிஐ வங்கியில் நடப்பு கணக்கை மிக எளிய முறையில் தொடங்கும் பிற வங்கியின் வாடிக்கையாளர்களும் இந்த மிகைப் பற்று வசதியை பெறலாம்.

இது குறித்து ஐசிஐசிஐ வங்கியின் எஸ்எஸ்இ மற்றும் மெர்ச்சன்ட் இகோ சிஸ்டம், சுய தொழில் பிரிவின் தலைவர் பங்கஜ் காட்கில் கூறுகையில்,

சரியான நேரத்தில் கடன் வழங்குவது மற்றும் வணிகத்தை எளிதாக்குவது உள்ளிட்டவை சிறு குறு நடுத்தர தொழில் முனைவோர்களின் வளர்ச்சிக்கு முக்கியமான அம்சங்களாக இருக்கின்றன என ஐசிஐசிஐ வங்கி எப்போதும் நம்புகிறது. அதற்கேற்ப, அமேசான்.இன் வர்த்தக தளத்தில் பதிவு செய்திருக்கும் விற்பனையாளர்களுக்கு உடனடியாகவும் டிஜிட்டல் வாயிலாகவும் மிகைப் பற்று வசதியை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.

இந்த கூட்டு செயல்பாடு அமேசான்.இன் வர்த்தக தளத்தில் பதிவு செய்துள்ள விற்பனையாளர்களுக்கு ரூ.25 லட்சம் வரை முழுமையாக டிஜிட்டல் முறையில் உடனடியாக மிகை பற்று பெறும் வசதியை பெற உதவுகிறது. இதன் மூலம் அவர்கள் தங்களது செயல்பாட்டு மூலதன தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள, மிகைப்பற்று தொகையை உடனடியாக பயன்படுத்த முடியும். விற்பனையாளர்கள் கடன் பெறும் தகுதியை ஆய்வு செய்ய நாங்கள் புதிதாக உருவாக்கியுள்ள தொழில்நுட்ப முறையானது, கிரெடிட் பீரோவில் உள்ள மதிப்பீட்டு புள்ளிகள் மற்றும் அமேசான்.இன் வர்த்தக தளத்தில் அவர்களின் விற்பனை பரிவர்த்தனைகளை அடிப்படையாகக் கொண்டு புதிய வழியில் ஆய்வு செய்ய இயலும்.

மேலும் இருப்பு நிலை அறிக்கைகள், வங்கி கணக்கு பரிவர்த்தனை அறிக்கைகள், வரி சான்றுகள் வாயிலாக மட்டும் மேற்கொள்ளப்படும் பழைய மதிப்பீட்டு முறையில் கடன் பெற முடியாத விற்பனையாளர்களுக்கு, இந்த மேம்படுத்தப்பட்ட புதிய வழிமுறை உதவும். சிறு குறு நடுத்தர தொழில் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு புதுமையான பாதைகளை திறந்து விடுவதுடன், அவர்களது தொழில்களை புதிய பிரிவுகளில் அபிவிருத்தி செய்ய வாய்ப்பளிக்க மேற்கொள்ளும் இந்த புதிய முன்னெடுப்பு எங்களது முயற்சிகளை எதிரொலிக்கிறது என நாங்கள் நம்புகிறோம் என்றார்.

அமேசான் பே இந்தியா நிறுவனத்தின் இயக்குநர் விகாஸ் பன்சால் கூறுகையில்,

கோவிட்-19 தடங்கல் காரணமாக முடங்கியிருந்த அமேசான்.இன் வர்த்தகத்தளத்தைச் சேர்ந்த விற்பனையாளர்கள் மீண்டு எழுவதற்கான உதவும் முயற்சிகளுக்கு நாங்கள் முன்னுரிமை அளித்து வருகிறோம். குறைந்த செலவிலும் வெளிப்படையான கொள்கைகள் மூலமாகவும் விற்பனையாளர்கள் எளிதாகவும் நம்பகமான முறையிலும் கடன் பெற உதவுவதே எங்களது நோக்கமாகும். நாடு முழுவதும் உள்ள எங்களது விற்பனையாளர்கள் உடனடியாகவும் டிஜிட்டல் முறையிலும் மிகைப் பற்று வசதியை மிகவும் குறைந்த செலவில் பெற்று, தற்போதும் எதிர்காலத்திலும் அவர்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள ஐசிஐசிஐ வங்கியுடனான எங்களது கூட்டு செயல்பாடு உதவும் என்றார்.

அமேசான்.இன் விற்பனையாளர்களுக்கான உடனடி மிகைப்பற்று வசதியின் பயன்கள்:
ஆன்லைன் கடன் விண்ணப்பம் :

அமேசான்.இன் வர்த்தக தளத்தில் பதிவு செய்திருக்கும் அனைத்து விற்பனையாளர்களும், முற்றிலும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் காகிதமில்லா வழிமுறையில் உடனடியாக மிகைப் பற்று வசதிக்கு விற்பனையாளர்கள் விண்ணப்பிக்க இயலும். எளிதான நடைமுறை : கிரெடிட் பீரோவில் உள்ள அவர்களது மதிப்பீட்டு புள்ளிகள் மற்றும் அமேசான்.இன் வர்த்தக தளத்தில் அவர்களது பரிவர்த்தனைகள் ஆகியவற்றின் அடிப்படையில் விற்பனையாளர்களுக்கு கடன் வழங்குவதற்கான எளிதான விரைவான மதிப்பீட்டு செயல்முறை. இருப்பு நிலையறிக்கை, வங்கி பரிவர்த்தனை அறிக்கை, வரி சான்று, ஜிஎஸ்டி போன்ற சிக்கலான காகித சான்றுகள் தேவைப்படும் வழக்கமான நடைமுறைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட மேம்பட்ட நடைமுறை.

உடனடி அனுமதி மற்றும் பண பரிவர்த்தனை :

ஒப்புதல் அளிக்கப்பட்ட மிகைப் பற்று தொகைக்கு, உடனடியாக அனுமதியளிக்கப்பட்டு அவர்களின் நடப்பு கணக்கில் சேர்க்கப்படும். உங்கள் தேவைக்கேற்ப பணம் வழங்கும் முறை : விற்பனையாளர்கள் தாங்கள் பயன்படுத்திய மிகை பற்று தொகைக்கு மட்டுமே தேவையான வட்டியை செலுத்தும் வசதி. தானியங்கி புதுப்பித்தல் வசதி : விற்பனையாளர்கள் தொகையை திருப்பி செலுத்தும் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு வருடாந்திர அடிப்படையில் மிகைப் பற்று தொகையை புதுப்பித்துக் கொள்ளலாம்.

விற்பனையாளர்கள் தங்களுக்கு அவசியமான உடனடி மிகைப்பற்று வசதியை பெறுவதற்கான விரைவான படிநிலைகள் :

சலுகைகளை நோட்டமிடும் வசதி, தகுதிவாய்ந்த விற்பனையாளர்கள் ஐசிஐசிஐ வங்கி வழங்கும் சலுகையை தங்களது அமேசான் செல்லர் சென்ட்ரல் போர்ட்டலில் வாய்ப்பை எளிதில் கண்டறிய முடியும். அமேசான்.இன் வர்த்தகதளத்தின் பதிவு செய்த விற்பனையாளர்களுக்கான ஆன்லைன் போர்ட்டல் அமேசான் செல்லர் சென்ட்ரல். பேனரில் கிளிக் செய்தல் : இதன் மூலம் செல்லர் சென்ட்ரலில் உள்ள பேனரில் கிளிக் செய்தவுடன் விற்பனையாளர்கள் ஐசிஐசிஐ வங்கியின் உடனடி மிகைப் பற்று தளத்திற்கு அழைத்து செல்லப்படுவார்கள். தகவல்களை நிரப்புதல் : விற்பனையாளர்கள் லாக் இன் செய்து டிஜிட்டல் விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும். அனுமதிக்கப்பட்ட தொகையை உறுதி செய்து கொள்தல் : விற்பனையாளர் தொகையை உறுதி செய்தவுடன், மிகைப்பற்று தொகை உடனடியாக ஒப்புதல் அளிக்கப்படும்.

விற்பனையாளர் ஏற்கனவே ஐசிஐசிஐ வங்கியில் நடப்பு கணக்கு வைத்திருந்தால், மிகைப்பற்று தொகையை விற்பனையாளர்கள் உடனடியாக பயன்படுத்திக் கொள்ள தொடங்கலாம்.

மேலும் படிக்க