April 29, 2022 தண்டோரா குழு
ஐசிஐசிஐ வங்கி இந்தியாவிலேயே முதன்முறையாக அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஏற்ற ஒரு முழுமையான டிஜிட்டல் பயன்பாட்டு தளத்தை அறிமுகப்படுத்துகிறது.
ஐசிஐசிஐ வங்கி அல்லாத இதர வங்கிகளின் வாடிக்கையாளர்கள் உள்பட சிறுகுறுநடுத்தர தொழில் முனைவோர்களுக்காக இந்த டிஜிட்டல் பயன்பாட்டு தளம் ப்ரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்தளம் மூன்று முக்கியமான சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.
1) பழைய வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட வங்கி சேவைகள்
2) மற்ற வங்கியின் வாடிக்கையாளர்களான, சிறுகுறுநடுத்தர தொழில் முனைவோர்களுக்கான தொகுப்பாக வங்கி சேவைகள்
3) அனைவருக்கும் மதிப்பு கூட்டப்பட்ட சேவைகள். இந்த டிஜிட்டல் பயன்பாட்டுத்தளம் தனது முதன்மை நோக்கமாக தொழில் துறை சார்ந்த தீர்வுகளுக்கு முன்னுரிமை அளிக்கிறது.
வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே சேவைகளை வழங்கும் தற்போதைய துறை நடைமுறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை கொண்டு வருகிறது.கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோர் அல்லது வங்கியின் கார்ப்பரேட் இன்டர்நெட் பேங்கிங் இணையதளத்திலிருந்து வணிகர்களுக்கான சூப்பர் செயலியான இன்ஸ்டாபிஸ் செயலியின் புதிய பதிப்பை எளிதாக பதிவிறக்கம் செய்வதன் மூலம் ஐசிஐசிஐ வங்கியின் டிஜிட்டல் தீர்வுகள் அளிக்கும் பலன்களை யார் வேண்டுமானாலும் பெறலாம்.
அறிமுக நிகழ்ச்சியில், ஐசிஐசிஐ வங்கியின் செயல் இயக்குநர் அனூப் பக்சி பேசுகையில்,
“சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறைதான் இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது என நாங்கள் ஐசிஐசிஐ வங்கியில் எப்போதும் நம்பிக்கை கொண்டுள்ளோம். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்கள் எளிதாக வர்த்தகம் செய்வதை மேம்படுத்தவும், அவர்கள் வளர்ச்சியில் பங்கு பெறுவதும் எங்கள் நோக்கமாக இருந்து வந்துள்ளது.
தொழில்நுட்பம் அளிக்கும் பலன்களை சிறு,குறு,நடுத்தர தொழில் முனைவோர்கள் புரிந்து கொள்கின்றனர் என்பதை எங்கள் ஆய்வின் மூலம் நாங்கள் கண்டுகொண்டோம். அவர்கள் வர்த்தகம் செய்வதை எளிதாக்குவதற்கான டிஜிட்டல் தீர்வுகளை பின்பற்ற ஆர்வமாக உள்ளனர். ஆகையால் அவர்கள் வளர்ச்சியில் அவர்களால் கூடுதல் கவனம் செலுத்த இயலும். சிறு,குறு,நடுத்தர தொழில் முனைவோர்களுக்கு அவர்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யக் கூடிய ஒரு முழுமையான இணையதளம் ஒன்றும் தேவையாக உள்ளது.
மேலும் எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் பலன்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என இதன் பலன்கள் ஒரு எல்லைக்குள் இருந்துவிடக் கூடாது என்று நாங்கள் நம்புகிறோம். அதனால் ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு மட்டுமின்றி இதர வங்கி வாடிக்கையாளர்களுக்கும் இந்த சேவையை பெறுவதற்கான வாய்ப்பை நிச்சயம் அளிக்க வேண்டும்.
இந்த தொலைநோக்கின் அடிப்படையில், சுமார் ஆறு கோடி எண்ணிக்கையிலான சிறு,குறு,நடுத்தர தொழில் முனைவோர்களை மேம்படுத்த, மதிப்பு கூட்டப்பட்ட சலுகைகளுடன் கூடிய வங்கி சேவைகளை மொத்தமாக பெறும் வகையில், ஒரு திறந்த விரிவான டிஜிட்டல் பயன்பாட்டு தளத்தை நாங்கள் உருவாக்கினோம். சிறு,குறு,நடுத்தர தொழில் முனைவோர்களுக்கான இந்த டிஜிட்டல் தீர்வுகள் அவர்களின் ஆற்றலை அதிகரிக்க செய்வதுடன் அவர்களின் வர்த்தகத்தையும் மேம்படுத்தும் என நாங்கள் நம்புகிறோம்” என்றார்.