February 24, 2017 தண்டோரா குழு
கோவையில் உள்ள ஈஷா மையத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு 112 அடியில் அமைக்கப்பட்டுள்ள சிவன் சிலையை வெள்ளிக்கிழமை மாலையில் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி கோவை வந்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:
ஹைட்ரோ கார்பன் திட்ட விவகாரத்தில் விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். கோவையில் மோனோ ரயில் திட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.மத்திய அரசு அனுமதி கிடைத்தவுடன் அத்திக்கடவு அவினாசி திட்டம் செயல்படுத்தப்படும்.ரூ.120 கோடியில் வெள்ளகோவில் பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும்.
ரூ. 300 கோடி செலவில் கோவை அரசு மருத்துவமனை மேம்படுத்தப்படும். ஐந்து நாட்களுக்குள் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கப்படும்.“நீட்” விவகாரம் தொடர்பாக வரும் 27-ஆம் தேதி பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேச இருக்கிறேன்”.
இவ்வாறு முதலமைச்சர் கூறினார்.