September 6, 2021 தண்டோரா குழு
கோவை குற்றாலம் திறக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு காரணமாக சாடிவயல் பகுதியில் அமைந்துள்ள கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி கடந்த ஏப்ரல் மாதம் மூடப்பட்டது. காரமடை பகுதியில் உள்ள பூச்சமரத்தூர் சூழல் சுற்றுலாவும் மூடப்பட்டன.
தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதை அடுத்து இன்று முதல் கோவை குற்றாலம், பூச்சமரத்துர் சூழல் சுற்றுலா மீண்டும் திறக்கப்படுகிறது. இதற்கு சுற்றுலா பயணிகள் coimbatorewilderness.com என்ற இணையதள முகவரி மூலம் பதிவு செய்ய வேண்டும்.
இணையதளம் மூலம் பதிவு செய்யும் சுற்றுலா பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டிருந்தது. 150 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டனர்.காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை குற்றாலம் செயல்பட்டது. கடந்த 5 மாதங்களுக்கு பின் கோவை குற்றாலம் மீண்டும் திறக்கப்பட்டது.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருவதால் அருவியில் தண்ணீர் வரத்து உள்ளது.
மழையினால் குற்றாலத்தில் தண்ணீர் வரத்து அதிகரித்தால் சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை சுற்றுலா பயணிகள் அனைவரும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.