April 15, 2016 வெங்கி சதீஷ்
இந்தியாவின் சட்ட மேதை பாபா சாகேப் அம்பேத்கரின் 125வது பிறந்த விழா முதல் முறையாக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டாப்பட்டது.
அமெரிக்க, நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. சபை தலைமை அலுவலகத்தில், அம்பேத்கரின் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டப்பட்டது. இந்த விழாவில், உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய நியூசிலாந்து முன்னாள் பிரதமர் ஹெலன் கிளார்க், ஒருவரை சமமாக மதிக்காமலிருப்பது ஒரு நாட்டிற்கு பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தும், அம்பேத்கரின் சிந்தனைகள் எல்லா காலத்திற்கும் ஏற்புடையதாகவே உள்ளது. இதனால் ஐநாவின் வளர்ச்சிக்கு அம்பேத்கரின் கோட்பாடுகள் மிகவும் உதவும் என்றார். அதை போல், இந்தியாவுடன் ஐநா சபை நல்ல நட்புடன் இருப்பதாகவும், அதனை தொடர விரும்பவதாகவும் கூறிய அவர், அம்பேத்கரின் கோட்பாடுகள் ஐநாவின் 2030 இலக்கை அடைய உதவும் எனவும் கூறியுள்ளார்.
சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்பதன் மூலமாக, நிலையான பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும் என்ற 2030ம் ஆண்டுக்குள் ஐ.நா.சபை இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காகப் பாடுபட்ட அம்பேத்கரை, சர்வதேச தலைவர்களில் ஒருவராக கவுரவித்து அம்பேதகரின் பிறந்தநாளை ஐநா முதல் முறையாக கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.