December 14, 2017 தண்டோரா குழு
ஓகி புயலால் இன்னும் 619 மீனவர்களை காணவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பா் 30ம் தேதி தென் தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களை ஓகி புயல் பயங்கரமாக தாக்கியது. புயல் காரணமாக தமிழகத்தில் கன்னியாகுமாரி மாவட்டமும், கேரளாவில் 5 மாவட்டங்களும் மிகவும் உருகுலைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான மீனவா்களை காணவில்லை போராட்டம் நடத்தி வந்தனர். இருப்பினும் எத்தனை மீனவா்களை காணவில்லை என்ற தகவலை அரசால் தற்போது வரை உறுதிப்படுத்த முடியவில்லை.காணமல் போன மீனவா்களை கணக்கெடுக்கும் பணியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது புள்ளி விவரம் ஒன்றை வழங்கியுள்ளது.அதில், ஒகி புயலால் தமிழகத்தில் 433 மீனவா்களும், கேரளாவில் 186 மீனவா்களும் என மொத்தமாக 619 பேரை காணவில்லை என்று தொிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 619 பேரையும் கண்டுபிடிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒகி புயல் காரணமாக தமிழக மீனவர்கள் 14 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.