March 9, 2022
தண்டோரா குழு
கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை மாதந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை காமராஜ் ரோடு, பாரதி நகர், சக்தி நகர், ஜோதி நகர், ராமனுஜ நகர், நீலிக்கோணம் பாளையம், கிருஷ்ணபுரம், சிங்காநல்லூர், ஜி.வி.ரெசிடன்சி, உப்பிலிபாளையம், இந்திரா நகர், பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், என்.ஜி.ஆர் நகர், ஹோப்காலேஜ் முதல் சிவில்ஏரோ வரை, வரதராஜபுரம், நந்தா நகர், ஹவுசிங் யூணிட், ஒண்டிப்புதூர் (ஒரு பகுதி), மசக்காளிபாளையம், மெடிக்கல் காலேஜ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை ஒண்டிப்புதூர் செயற்பொறியாளர் அருள்செல்வி தெரிவித்துள்ளார்.