• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஒன்றிய அரசு தேர்வில் ஆள் மாறாட்டம்; அரியானா வாலிபர்கள் 4 பேர் கைது

March 15, 2023 தண்டோரா குழு

ஒன்றிய அரசு தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக அரியானா வாலிபர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் ஒன்றிய அரசின் வன மரபியல் மற்றும் மர பெருக்கு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.இந்த நிறுவனத்தில் உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்வதற்காக ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டது.இதில் இந்தியா முழுவதிலும் இருந்து ஆன்லைன் மூலமாக ஏராளமான நபர்கள் விண்ணப்பித்திருந்தனர். இந்த பணிக்கான எழுத்து தேர்வு கடந்த மாதம் 4ம் தேதி கோவையில் நடந்தது.

அப்போது தேர்வு எழுத வந்தவர்களின் போட்டோ, கைரேகை ஆகியவை பதிவு செய்யப்பட்டது. நேற்று முன்தினம் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெற்றது. அப்போது தேர்வு எழுதிய 4 பேரின் போட்டோ, கைரேகை ஆகியவை மாறுபட்டிருந்தது. இது அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து அதிகாரிகள் அந்த 4 பேரையும் சந்தேகத்தின் பேரில் பிடித்து ஆங்கிலத்தில் எழுதுமாறும்,பேசுமாறும் கூறினர்.ஆனால் அவர்களால் பேசவும்,எழுதவும் முடியவில்லை. ஆனால் தேர்வில் இவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தனர்.இதனால் அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது.

விசாரணையில் 4 பேரும் ஆள் மாறாட்டம் செய்து தங்களது பெயரில் வேறொருவரை வைத்து தேர்வு எழுதியது தெரியவந்தது.இது குறித்து ஒன்றிய அரசின் வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தின் இயக்குனர் குனிக்கண்ணன் சாயிபாபா காலனி போலீஸில் புகார் அளித்தார்.புகாரின் பேரில், போலீசார் மோசடி ஆள்மாறாட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது ஹரியானா மாநிலத்தை சேர்ந்த அமித் குமார் (30), இன்னொரு அமித்குமார் (26), அமித் (23), சுலைமான் (25) என தெரிய வந்தது. போலீஸார் 4 பேரையும் இன்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.இந்த மோசடிக்கு இன்னொரு நபர் மோசடியாக உதவி செய்திருப்பதாக தெரிகிறது.அந்த நபர் தான், தேர்வு எப்படி எழுத வேண்டும்? நேர்முக தேர்வு எப்படி நடக்கும்? என 4 பேருக்கும் பயிற்சி அளித்து அனுப்பி வைத்துள்ளதாக தெரிகிறது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க