July 18, 2023 தண்டோரா குழு
ஒன் ப்ளஸ் ரோடு டிரிப் ஃபியூச்சர் பௌண்டு அதன் நாடு தழுவிய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக கோவை வந்தடைந்தது.
ஒன் ப்ளஸ் நிறுவனத்தின் அனைத்து வகையான பிராண்டுகளை இரண்டு பெரிய ட்ரக்குகளில் மொபைல் அவுட் லெட் விற்பனை நிலையமாக புதிய பிரச்சாரத்தை துவக்கியுள்ளது.
உலக அளவில் மொபைல் போன், டி.வி.,பட்ஸ் என பல்வேறு தொழில்நுட்ப பிராண்டான ஒன்பிளஸ் தனது தொழில்நுட்ப அனுபவங்களை இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் விளம்பரபடுத்தும் நோக்கத்தில். புதுமையான இரண்டாவது பதிப்பு பிரச்சாரத்தை செய்து வருகிறது.
இந்நிலையில் இந்தியாவின் முக்கிய நகரங்களில் சுற்றி வரும் இந்த ஒன்பிளஸ் ரோட் ட்ரிப் ஃபியூச்சர் பௌண்டு கோவை வந்தடைந்தது.ஒன் ப்ளஸ் நிறுவனத்தின் அனைத்து வகையான பிராண்டுகளை மொபைல் அவுட்லெட்டாக வழங்கும் முயற்சியில் இரண்டு பெரிய 32 அடி நீள டிரக்குகளை விற்பனை நிலையங்களாக மாற்றி புதிய பிரச்சாரத்தை துவக்கயுள்ளது.
இது குறித்து ,ஒன் ப்ளஸ் இந்தியாவின் விற்பனை இயக்குனர் ரஞ்சித் சிங் செய்தியாளர்களிடம் பேசினார்.
ஒன்பிளஸ் இன் இந்த சாலைப் பயணம் 2023 இன் முக்கிய சிறப்பம்சமாக,சமீபத்தில், பார்சிலோனாவில் நடைபெற்ற மொபைல் வோலட் காங்கிரஸ் 2023 இல் வெளியிடப்பட்ட ஒன்ப்ளஸ் 11 கான்செப்ட் ஃபோன் வெளியிடப்பட்டது. ஒன்பிளஸ் 11 கான்செப்ட் இப்போது முதன்முறையாக இந்திய மக்களை சென்றடையும் வகையில் இந்த ட்ரிப் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இது தவிர பாப்-அப் அனுபவ அவுட்லெட்டில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஃபிளாக் ஷிப் ஒன்பிளஸ் 11 சீரிஸ், புத்தம் புதிய ஒன்பிளஸ் பேட், ஒன்பிளஸ் பட்ஸ் புரோ 2, ஒன்பிளஸ் நார்ட் CE 3 லைட், ஒன்பிளஸ் நார்ட் பட்ஸ் 2, ஒன்பிளஸ் கீபோர்டு 81Pro மற்றும் ஒன்பிளஸ் மானிட்டர் X 27 ஆகியவையும் இதில் இடம்பெற்றுள்ளது .இந்த புதிய விளம்பரப் பிரச்சாரத்திற்காக இரண்டு பெரிய 32 அடி டிரக்குகள் மொபைல் விற்பனை நிலையங்களாக கோவையின் முக்கிய பகுதிகளுக்கு செல்ல உள்ளது குறிப்பிடதக்கது.
குறிப்பாக ஒன் பிளஸ் ரெட் கேபிள் கிளப் உறுப்பினர்களுக்கு இந்த ரோடு டிரிப் உற்சாகமான “ஸ்பாட் தி பஸ் வித் ஒன்பிளஸ்ரோடு டிரிப்” செயல்பாட்டை வழங்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.