July 8, 2017 தண்டோரா குழு
அலாஸ்கா மாகணத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா,பயணி ஒருவரின் குழந்தையை தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
அமெரிக்காவின் அலாஸ்கா மாகணத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில், சோலன் ஜச்கின்ச்கி என்னும் பயணி ஒருவர், தனியார் விமானத்திற்காக காத்திருந்தார். அவர் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகில் அமெரிக்காவின் முன்னாள்அதிபர் பாரக் ஒபாமாவும் அமர்ந்துள்ளார்.
ஒபாமா தன்னை முன்னாள் அதிபர் என்று காட்டிக்கொள்ளாமல், ஒரு சராசரி பயணியாக சோலனுடன் நட்புடன் பேசிக்கொண்டிருந்த போது, சோலனின் மகள் கிசெல்லை ஒபாமா தூக்கி வைத்திருந்தார். அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாக பரவியுள்ளது.
இது குறித்து அந்த குழந்தையின் தாய் கூறுகையில்,
“நான் விமான நிலையத்தில், தனியார் விமானத்திற்காக என்னுடைய மகளுடன் காத்திருந்தேன். என்னுடைய கணவர் வெளியே சென்றிருந்தார். நான் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகே அதிபர் ஒபாமா அமர்ந்திருந்தார்.
என் குழந்தையை பார்த்துவிட்டு, “யார் இந்த அழகான குழந்தை?” என்று செல்லமாக கேட்டார். பிறகு என் மகளை தூக்கி கொண்டார். நாங்கள் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அதிபர் ஒபாமா என் குழந்தையை தூக்கி வைத்திருந்ததை என்னுடைய கைபேசி மூலம், புகைப்படம் எடுத்தேன்.என்னுடைய கணவர் அங்கு வந்தவுடன், “உங்கள் குழந்தையை எடுத்து செல்கிறேன்” என்று விளையாட்டாக கூறினார். பலருக்கு இது போன்ற ஒரு சந்தர்ப்பம் கிடைப்பது அரிது” என்று கூறினார்.