• Download mobile app
08 Sep 2024, SundayEdition - 3133
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஒருகோடி பரிசு விழுந்ததால் காவல்நிலையத்தில் தங்கிய கூலி தொழிலாளி

March 28, 2016 webdunia.com

மேற்கு வங்க மாநிலம் பர்துவான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மொபிஜூல் ரஹிமா ஷேக் (22). இவர் கட்டுமான தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார்.

இவர் தனது நண்பர்களின் உதவியுடன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வேலை தேடி கேரள மாநிலம் கோழிக்கோட்டிற்குச் சென்றார்.

அங்கு அவருக்கு ஒரு கட்டிட நிறுவனத்தில் வேலைக் கிடைத்தது. இதையடுத்து முதல் நாள் அவர் வேலைக்கு செல்லத் தொடங்கினார்.

மொபிஜூல் தனக்கு கிடைத்த முதல் நாள் கிடைத்த சம்பளத்தில், கேரள அரசின் லாட்டரி டிக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, அவர் மறுநாள் வழக்கம்போல வேலைக்குச் சென்றுள்ளார். அன்று நடந்த லாட்டரி குலுக்கலில் முதல் பரிசாக ரூ.1 கோடி மொபிஜூல் ரஹிமா ஷேக் வாங்கிய லாட்டரிக்கு விழுந்தது.

அவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்திருந்தாலும் பரிசு விழுந்த விவரம் அவருக்கு 2 நாட்கள் கழித்துத்தான் தெரியவந்தது.

தான் வாங்கிய லாட்டரிக்கு ஒரு கோடி பரிசு விழுந்ததால் தனது உயிருக்கு ஏதும் ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் காவல்துறையினரின் உதவியை நாட முடிவு செய்து, சேவாயூர் காவல்நிலையத்தில் இது குறித்த விவரத்தைத் தெரிவித்துள்ளார்.

அந்தத் தொகையை யாரும் அபரித்துவிடாமல் இருப்பதற்குக் காவல்துறையினர் பாதுகாப்பு அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

அன்று சிவராத்திரி என்பதால் வங்கி விடுமுறையாக இருந்தது. எனவே, மறுநாள் வருமாறு மொபிஜூலிடம் சப் இன்ஸ்பெக்டர் கூறினார்.

இந்நிலையில் தனக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்ததால் எனது அறையில் தங்க பயமாக உள்ளது என்று கூறிய அவர் காவல் நிலையத்திலேயே தங்கியுள்ளார். குற்றம் செய்துவிட்டு காவல்நிலையத்தில் தங்கியவர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் ஒரு கோடிரூபாய் பரிசு விழுந்ததனால் காவல் நிலையத்தில் தங்கிய இவர் சற்று வித்தியாசமானவர் தான்.

இதையடுத்து மறுநாள் காவல்துறையினரின் உதவியுடன் பரிசுத் தொகையை பெற்று வங்கிக் கணக்கில் சேர்த்தார்.

இது குறித்து மொபிஜூல் ரஹிமா ஷேக் கூறுகையில், நன்றாகச் சாப்பிட வேண்டும் என்றும் ஊருக்குச் சென்று அங்குப் பெரிய வீடு கட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க