• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஒருவார காலத்திற்குள் சாலைகளை சீரமைக்கப்படவில்லை என்றால் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் -எஸ்.பி வேலுமணி அறிவுப்பு

November 14, 2022 தண்டோரா குழு

கோவை குனியமுத்தூரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி பார்வையிட்டார்.

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட குனியமுத்தூர் 87 மற்றும் 88 வது வார்டு மாநகராட்சி பகுதிகளில்
கேலக்ஸி கார்டன் பேஸ் 2,வசந்தம் நகர், அம்மன் கோயில் ரோடு,குறிஞ்சி நகர்,
கிளாசிக் பார்க்,மகாராஜா காலனி கங்கா நகர், ஜெ.ஜெ.நகர்,லவ்லி கார்டன், போத்தீஸ் கார்டன், மற்றும் சுண்டக்காமுத்தூர் ரோடு உள்ளிட்ட இடங்களில்மழை நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கழக தலைமை நிலைய செயலாளரும்,கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும்,முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்பி.வேலுமணி பார்வையிட்டார்.

கோவையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்ட முன்னாள் அமைச்சரும்,கழக தலைமை நிலைய செயலாளருமான எஸ்பி.வேலுமணியிடம் அங்குள்ள பொதுமக்கள் திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர்.

மேலும் திமுக ஆட்சி அமைந்த பிறகு இந்தப் பகுதிகளை யாரும் கண்டு கொள்வது இல்லை என்றும் மீண்டும் அதிமுக ஆட்சியே வரவேண்டும்,நீங்களே எங்களுக்கு அமைச்சராகவும் வர வேண்டும் என்றும் பெண்கள் வேண்டுகோள் விடுத்தனர்.மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை விரைந்து வெளியேற்ற வேண்டும் என அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

மேலும் ஒரு வாரத்தில் சீர் செய்யாவிட்டால் மக்களை திரட்டி மிகப்பெரிய ஒரு உண்ணாவிரதப் போராட்டம் இருக்கப் போவதாக பொது மக்களிடம் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.இந்த ஆய்வின் போது இடிந்து விடும் சூழலில் ஆபத்தான நிலையில் உள்ள ஒரு வீட்டிற்குள் தண்ணீர் நிறைந்து நிற்கும் சூழலிலும் வயதான உடல் நலம் குன்றிய மூதாட்டி ஒருவர் கட்டிலில் படித்திருந்ததை பார்த்து உடனடியாக கட்சி தொண்டர்களிடம் அந்த மூதாட்டியை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுவதற்கும் மருத்துவ உதவி ஏதாவது தேவைப்பட்டால் உடனே மருத்துவமனையில் சேர்த்து வேண்டிய உதவிகளை அந்த மூதாட்டிக்கு செய்ய வேண்டும் என தொண்டர்களுக்கு உத்தரவிட்டார்.

எந்தப் பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் ஆபத்தான நிலையில் பணியாற்றிக் கொண்டிருந்த தூய்மை பணியாளர்களிடம் அன்போடு நலம் விசாரித்து அருகில் இருந்த அதிகாரிகளிடம் இது போன்ற பணிகளில் அப்பாவி தொழிலாளர்களை ஈடுபடுத்தும் போது தகுந்த பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் 88 வது வார்டு பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீர் பாதித்த இடங்களை பார்வையிட்டு,சிறுவாணி டேங்க் அருகே இரண்டு நாட்களுக்கு முன்பாக தொடர் மழையின் காரணமாக மின் கசிவு ஏற்பட்டு ஒரு வீடு முழுவதுமாக தீக்கிரையாகி தரைமட்டமானது. இந்த தகவல் அறிந்ததும் நேரடியாக அந்த வீட்டிற்கு சென்று பாதிக்கப்பட்ட வேலன், ராமலட்சுமியை சந்தித்து ஆறுதல் கூறியதுடன் நிதி உதவியும் அளித்தார்.

மேலும் படிக்க