April 1, 2016 வெங்கி சதீஷ்
தமிழகத்தையே உலுக்கிய கிரானைட் மோசடி புகாரின் பேரில் வழக்குப் பதியப்பட்டு விசாரணை நடைபெற்றது. இதில் பி.ஆர்.பழனிசாமி என்பவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதில் மதுரை மாவட்டம் மேலூரில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் அவருக்குச் சாதகமாக நீதிபதி மகேந்திர பூபதி செயல்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து பஷீர் அகமது, சரவணன் ஆகியோர் கொண்ட நீதிபதிகள் குழு நேற்றும் இன்றும் விசாரணை நடத்தினர். இதில் மகேந்திரபூபதி வலக்கை முழுமையாக விசாரிக்கவில்லை எனவும் ஒருதலைபட்சமாக செயல்பட்டார் எனவும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் இன்று அதிரடியாகப் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக பாரதிராஜா என்ற நீதிபதியையும் நியமித்து நீதிபதிகள் குழு உத்தரவு பிறப்பித்தது.
ஒரு நீதிபதி குற்றவாளிக்கு ஆதரவாகச் செயல்பட்ட சம்பவம் நீதித்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.