• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஒரு நிபந்தனை தந்து தன்னுடைய வாகனத்தை விற்ற முதியவர்

March 13, 2017 தண்டோரா குழு

ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த எலிஸ் (வயது 26) வயது டொமெனிக் கோக்கே (வயது 29) உலகம் முழுவதையும் சுற்ற மிகுந்த ஆர்வமுடையவர்கள். அவர்களுக்குச் சமீபத்தில்தான் திருமணம் நடந்தது.

அவர்கள் உலகம் சுற்றுவதற்குத் தகுந்த வாகனத்தைத் தேடிக் கொண்டிருந்தனர். அவர்களுடைய விருப்பதைப் பூர்த்தி செய்யும் வகையில் ஒரு வாகனம் விற்கப்படுவதாக ஆன்லைன் விளம்பரம் மூலம் அறிந்தனர். அந்த வாகனத்தின் விலை 39,000 அமெரிக்க டாலர் என்று குறிப்பிட்டிருந்தது. அந்தத் தொகையைக் கண்டதும் தங்களுடைய கனவு வாகனம் கிடைக்காமல் போய்விடுமோ என்று கவலையடைந்தனர். தங்களுடைய பட்ஜெட்டுக்கு மேல் இருந்தாலும் பரவாயில்லை. அந்த வாகனத்தைப் பார்த்துவிட்டு வரலாம் என்று முடிவெடுத்தனர்.

அந்த வாகனத்தைப் பார்க்க அதன் உரிமையாளர் பீட்டர் வான் மல்ட்சஹன் வீட்டிற்குச் சென்றனர். அவர் ஓய்வுதியம் பெரும் முதியவர் ஆவார். எலிஸ் மற்றும் டொமினிக் அந்த வாகனத்தைப் பார்த்தபோது, அது நன்றாக இயங்குவதையும், தங்களுடைய எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வதாக இருப்பதையும் கண்டனர்.

பீட்டருடன் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் தன்னுடைய கடந்த வாழ்கையின் சுற்றுப் பயணக் கதைகளைக் கூறினார். பல சாகசங்களால் அவருடைய திருமணத்தின் ஆரம்ப நாட்கள் நிறைந்திருந்தன. பயணப் பதிவாளராக இருந்த எலிஸுக்கு சிறிது பொறாமையாகக் கூட இருந்தது. அவர்களுடைய கனவு வண்டியை வாங்க முடியவில்லை என்று சோர்வடைந்த ஆனால் அவருடைய கதைகளை கேட்டதால் ஊக்கமடைந்த எலிஸ் மற்றும் டொமினிக் பீட்டரின் வீட்டிலிருந்து வெளியேறினர்.

ஒரு வாரம் கழித்து, பீட்டரிடமிருந்து அவர்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அந்த வாகனத்தின் விலை கேட்டு வேறு இருவரிடமிருந்து அழைப்பு வந்தது என்றும் ஆனால் அவர்கள் அதை வாங்கி பயன்படுத்துவதை காட்டிலும் அதில் அதிக தூசிப்பட்டு காட்சியளிக்க விரும்பினர் என்று பீட்டர் விளக்கினார். அந்த வாகனத்தை வாங்க அவர்களால் எவ்வளவு தொகை கொடுக்கமுடியும் என்று விசாரித்தார்.

இதை கேட்ட எலிஸ் மற்றும் டொமினிக் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். பீட்டர் அறிவித்துள்ள தொகையில் பாதியைத்தான் தர முடியும் என்று தெரிவித்தனர்.

“1972ம் ஆண்டு அவரும் அவருடைய மனைவியும் அந்த வாகனத்தை வாங்கியுள்ளனர். அதை புதிதாக திருமணமாகி புதிய இல்லற வாழ்கையைத் தொடங்கும் அவர்களுக்கு தருவது அவருக்கு விருப்பமாக இருந்தது. இந்த வாகனத்தை நான் உங்களிடம் தருகிறேன். ஆனால், ஒரு நிபந்தனை என்று கண் கலங்கியவராக எங்களிடம் கூறினார்.

நாங்கள் எதையும் செய்ய தயாராக இருக்கிறோம் என்று அவரிடம் கூறினேன். நீங்கள் சாகசங்களை செய்வீர்கள். உங்களுக்குக் குழந்தைகள் பிறந்த பிறகு, பல பல சாகசங்களுக்கு அவர்களையும் உங்களுடன் அழைத்து செல்வீர்கள் என்று எனக்கு வாக்கு தரவேண்டும்” என்றார்.

தற்போது அந்த வாகனத்துக்கு ‘ஸ்கௌட்’ என்று பெயரிட்டு, பீட்டருக்கு அவர்கள் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற அதில் ஆஸ்திரேலியாவிற்கு வெளியே பயணம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க