• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஒரு ரூபாய்க்கு மதிய உணவு கோவையில் அசத்தும் தனியார் அறக்கட்டளை

June 30, 2023 தண்டோரா குழு

கோவையில்,வெறும் ஒரு ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் சேவையை துவக்கியுள்ள தனியார் அறக்கட்டளைக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

கோவையில் குறைந்த விலையில் உணவு வழங்கும் சேவையை, பல்வேறு அமைப்பினரும் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தெய்வேந்திரன் நாடார் அறக்கட்டளையினர் வெறும் ஒரு ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் சேவையை துவக்கி உள்ளனர்.

ஐந்து விதமான வெரைட்டி சாதங்களை திங்கள் முதல் வெள்ளி வரை வாரத்தின் ஐந்து நாட்களும் வழங்கி வரும் இந்த உணவை பெற கோவை நகரின் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர்,வரிசையில் நின்று உணவுப் பொட்டலங்களை வாங்கிச் செல்கின்றனர்.

இது குறித்து அறக்கட்டளையின் மேலாளர் ஜெபசீலன் கூறுகையில்,

வாரம்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை, மதியம், 12:30 மணிக்கு உணவுப் பொட்டலம் வினியோகம் செய்வதாகவும் ஆரம்ப நாட்களில் சுமார் இருநூறு பேர் வரை வந்த நிலையில் தற்போது தினமும் ஐநூறு பேர் வரை உணவு பொட்டலங்களை பெற்று செல்வதாக தெரிவித்தார். தினமும் ஒரு வகை உணவு என்ற வகையில், வெரைட்டி சாதம் பொட்டலமாக வழங்கப்படுவதாக கூறிய அவர்,ஏற்கனவே, 10 ஆண்டுகளாக எங்களது அறக்கட்டளை பல்வேறு சமூக நலப்பணிகளை செய்து வருவதாகவும்,ஏழை குழந்தைகளுக்கு இலவச கல்வி,கொரோனா காலத்தில் ஏற்கனவே பல்வேறு சமூக நலப்பணிகளை செய்து வந்துள்ளதாக தெரிவித்த அவர், மேலும் ஒரு சேவையாக, ஏழை எளிய மக்களின் பசியை போக்கும் நோக்கத்தில், வாரத்தில், 5 நாட்கள் ஒரு ரூபாய்க்கு உணவு வழங்கும் இந்த திட்டத்தை துவக்கி உள்ளதாக தெரிவித்தார்.

உணவு வாங்க வருபவர்களிடம் வாங்கும் ஒரு ரூபாயை கடவுளுக்கு காணிக்கையாக செலுத்துவாத நெகிழ்ச்சியுடன் அவர் கூறினார்.ஒரு ரூபாய்க்கு உணவு வழங்கப்படும் இந்த சேவையை பல்வேறு தரப்பினரும் வரவேற்று பாராட்டி வருவது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க