September 9, 2022
தண்டோரா குழு
அம்மன்குளம் பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் சார்பாக கட்டப்பட்டுள்ள சமுதாய கழிவறை வளாகத்தில் , ஓரே அறையினை இருவர் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கபட்டு இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.
இதற்கிடையில், இக்கழிப்பிடத்தில் உள்ள பழுதுகளை நீக்கி,பராமரிப்பு செய்ய ஏற்கனவே அனுமதிக்கப்பட்டு பணி நடைபெற்று வருகிறது. சிறுவர்கள் உபயோகப்படுத்த அமைக்கப்பட்ட கழிப்பிடம் உபயோகம் இல்லாமல் இருப்பதால் அவைகளை பெரியவர்களுக்கான சிறுநீர் கழிப்பிடமாக மாற்றப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில்,ஒரே அறையில் இரண்டு கழிவறைகள் இருந்த நிலையில்,அதை சிறுநீர் கழிக்கும் இடமாக மாற்றி கோவை மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.