August 1, 2022 தண்டோரா குழு
ரியல் எஸ்டேட் துறையில் உள்ள பல்வேறு குறைகளை நிவர்த்தி செய்ய, ஒரே இந்தியா, ஒரே உரிமம் என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவேண்டும், கோயமுத்தூர் அசோசியேசன் ரியல்டர்ஸ் என்றழைக்கப்படும் கோயேரியா அமைப்பின் தலைவர் சிவக்குமார் கூறியுள்ளார்.
கோயமுத்தூர் அசோசியேசன் ரியல்டர்ஸ் என்றழைக்கப்படும் கோயேரியா அமைப்பின் 10 வது ஆண்டு விழா , கோவை பந்தயசாலை பகுதியில் உள்ள தனியார் உணவக அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் வாயிலாக இந்த அமைப்பின் சார்பாக புதிய லோகோ வெளியிடப்பட்டு, அதன் அருகில் அமைப்பின் நிர்வாகிகள் நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இந்த அமைப்பின் தலைவர் சிவக்குமார்,
இந்த அமைப்பு, நேசனல் அசோசியேசன் ரியல்டர்ஸ் அமைப்பின் பிம்பமாக இயங்கி வருகின்றது, இந்த அமைப்பின் 10 ஆண்டுகால பயணம் குறித்து கோவை மக்களுக்கு தெரிய படுத்தவே இந்த கூட்டத்தை முன்னேடுத்து வருவதாகவும், இந்த அமைப்பின் பத்தாவது ஆண்டு விழா நிகழ்ச்சிகள் அதன் லோகோவை வெளியிட்டுள்ளதாகவும் இதில் கோவை மாநகரத்தின் முக்கிய தொழில் அதிபர்கள், அங்கீகரிக்கப்பட்ட மக்களை அழைத்து, நாங்கள் என்ன செய்து வருகின்றோம் என்பதை தெரிவித்து வருவதாக தெரிவித்தார்.
இந்த அமைப்பின் சார்பாக தமிழக அரசுக்கு இரண்டு கோரிக்கைகளை முன்வைப்பதாகவும், தமிழக தொழில் துறையில், அனைத்து, எங்களது சங்கத்தின் விண்ணப்பங்களை உடனுக்குடன் அனுமதியளித்து வருகின்றனர், இதற்க்கு தமிழக அரசுக்கு முதலில் நன்றியினை தெரிவித்துக் கொள்வதாகவும், மேலும் நலிவடைந்த மக்களுக்கு வீடு வழங்குவதில் பத்திர பதிவு தொகையை குறைத்து வழங்க வேண்டும் எனவும், வீட்டுமனைகளை பதிவு செய்வது போன்று அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளுக்கும் பத்திரபதிவை நீட்டித்து வரைமுறை செய்து அமுல்படுத்த வேண்டும் என்றார்.
மேலும், மத்திய அரசுக்கு ஒரு கோரிக்கை விடுப்பதாகவும், அதில் 18 சதவிகித விழுக்காடு ஜிஎஸ்டி வரியை குறைத்து அமுல்படுத்த வேண்டும். ஒரு இந்தியா ஒரு உரிமம் என்ற திட்டத்தின் கீழ் ரியல் எஸ்டேட் துறைக்கு வழங்கினால் இத்துறை மேன்மையடையும் என்று தெரவித்தார். தற்போது உள்ள கோயேரியா அமைப்பில் சேர்த்து பயணிப்பதால் என்னேன்ன பயன்கள் என்றால், இந்தியா முழுவதும் 45 ஊர்களில் இயங்கி வருவதாகவும், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் செயல்பட்டு வருவதாகவும், ரியல் எஸ்டேட் துறையில் நம்பிக்கையுடனும், மக்களிடம் நன்மதிப்பை பெறும் வகையில் செயல்பட உங்களுக்கு ஒரு சிறந்த தளத்தை உருவாக்கி தரும் என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், கோயேரியா அமைப்பின் தலைவர் சிவகுமார், நிறுவன தலைவர் ஜெயராமன், உதவி தலைவர் வெங்கடேசன், செயளாளர் பிரதீஸ், இணை செயலாளர் மோகன், பொருளாளர் ரமேஷ் கோபாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.