September 11, 2017 தண்டோரா குழு
இந்திய பிரதமர் மோடியின் ஜிஎஸ்டி திட்டத்தால் ஈர்கப்பட்ட பெண் ஒருவர் தனக்கு பிறந்த மூன்று குழந்தைகளுக்கு ஜிஎஸ்டி என்று பெயரிட்டுள்ளார்.
குஜராத் மாநிலத்தின் சூரத் நகரை சேர்ந்த கஞ்சன் படேல் என்பவருக்கு சமீபத்தில் மூன்று பெண் குழந்தைகள் பிறந்தன. அந்த குழந்தைகளுக்கு ஜிஎஸ்டி(GST) என்று பெயர் சூட்டியுள்ளார். அதாவது ஜிஎஸ்டி என்னும் சொல்லின் முதல் எழுத்தை கொண்டு கவாரி,சஞ்சி மற்றும் தராவி(Gawari, Sanchi and Tarawi) என்று பெயர் சூட்டியுள்ளார்.
“இந்திய பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்த ஒரு நாடு ஒரு வரி என்னும் ஜிஎஸ்டி திட்டம் எங்களை மிகவும் கவர்ந்தது. அதனால், நானும் என் கணவரும் எங்களுடைய மகள்களுக்கு ஜிஎஸ்டி என்று பெயரிட முடிவு செய்தோம்” என்று கஞ்சன் படேல் தெரிவித்தார்.
பிரதமரின் ஒரே நாடு ஒரே வரி திட்டத்தால் ஈர்க்கப்பட்ட மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஜிஎஸ்டி என்று பெயர் சூட்டியது இது முதல் முறை அல்ல.
ஜிஎஸ்டி கொண்டு வரவிருந்த நாளுக்கு முதல் நாள், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு குடும்பத்தினர், தங்களுக்கு புதிதாக பிறந்த குழந்தைக்கு ஜிஎஸ்டி என்று பெயரிட்டனர். அதேபோல், சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள ஒரு குடும்பத்தினர் ஜிஎஸ்டி அமலுக்கு கொண்டு வந்த நாளில், பிறந்த குழந்தைக்கு ஜிஎஸ்டி என்று பெயர் சூட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.