March 14, 2022
தண்டோரா குழு
டிரீம் லைட் ஸ்போர்ட்ஸ் சார்பாக கோவை செல்வபுரத்தில் செயற்கைப் மைதானத்தில் நடந்த மாநில அளவிலான கால்பந்து விளையாட்டு போட்டியில் டிராக் போர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 15 வயது, 17 வயது மட்டும் 19 வயதிற்குட்பட்ட மூன்று பிரிவுகளிலும் முதலிடம் பிடித்து கோப்பை மற்றும் ரொக்கப் பரிசை தட்டிச் சென்றது.
19 வயதுக்குட்பட்ட இறுதி ஆட்டத்தில் 4-0 என்ற கோல் கணக்கில் பிரைட் அணி அணியை வென்றது, 17 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் யுனைடெட் அணியை 2-0 என வென்றது, 15 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஜெயேந்திரா பள்ளியை வீழ்த்தியது.