• Download mobile app
08 Sep 2024, SundayEdition - 3133
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஒலிம்பிக் சுடர் எப்படி ஏற்றப்படுகிறது?

April 24, 2016 bbc.com

உலகின் மிகப்பெரும் விளையாட்டுத் திருவிழா எனக் கருதப்படும் ஒலிம்பிக் போட்டியின் மிக முக்கியமான ஒரு அம்சம், போட்டி காலம் முழுவதும் எரியும் ஒலிம்பிக் ஜோதி.

அந்தச் சுடர் ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியின் போதும் பழமையான பாரம்பரிய முறையில் கிரேக்கத்தில் ஏற்றப்படும்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பண்டைகால ஒலிம்பிக் போட்டிகளின்போது அச்சுடர் எப்படி ஏற்றப்பட்டதோ அதே முறையே இப்போதும் பின்பற்றப்படுகிறது.

பாரம்பாரிய முறையில் இந்த சுடரை ஏற்றும் தற்போதைய நடைமுறை 80 ஆண்டுகளுக்கு முன்னர் பெர்லின் ஒலிம்பிக் போட்டிகளின்போது மீண்டும் உயிர்பிக்கப்பட்டது.

சூரிய ஒளியை குழியாடியின் மையத்தில் விழும்படி செய்யப்பட்டு அதனால் உருவாகும் வெப்பத்தைக்கொண்டே ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுகிறது.

ஒலிம்பிக் போட்டி எந்த நாட்டில் நடைபெற்றலும், கிரேகத்தின் தென் பகுதி நகரொன்றில் பாரம்பரிய முறையில், நடனம், நாடகம் போன்ற கலையம்சங்கள் நடத்தி ஒவ்வொரு முறையும் இச்சுடர் ஏற்றப்படும்.

இந்தச் சுடர் ஏற்றப்படுவதற்கு முன்னர், ஒளிக்கான கிரேக்கக் கடவுள் அபோலோவிடம் பிரார்த்தனை செய்த பிறகு, நீண்ட உடையணிந்த நடிகை ஒருவர், மிகவும் உளப்பூர்வமாக நிலத்தில் மண்டியிட்டு, குழியாடி ஒன்றில் விழும் சூரியக் கதிர்கள் மூலம் ஏற்படும் வெப்பத்தை, ஒலிம்பிக் சுடரை ஏந்திவரும் விளக்கின் மீது பாய்ச்சி அந்த ஜோதியை ஏற்றுவார்.

பின்னர் அது பாரம்பரிய இசை மற்றும் நடனங்களுடன் உலகெங்கும் பயணமாகக்கூடிய முதல் ஒலிம்பிக் பந்தத்தில் ஏற்றப்படும்.

அந்த முறையில் ஏற்றப்படும் ஒலிம்பிக் சுடரே பல நாடுகளில் பயணித்து, இறுதியாகப் போட்டி தொடங்கும் நாளன்று, புகழ்பெற்ற உள்நாட்டு விளையாட்டு வீரர்களால், அரங்கைச்சுற்றி வலமாக எடுத்துவரப்பட்டு, மிகவும் பிரபலமான வீரர் ஒருவரிடம் கையளிக்கப்படும்.

அவர் அந்த அரங்கில் அமைக்கப்பட்டிருக்கும் கொப்பரை ஒன்றுக்கு அச்சுடரை எடுத்துச் சென்று அங்கு போட்டி காலம் முழுவதும் எரியும் ஜோதியை ஏற்றிவைப்பார்.

எனினும் ஒவ்வொரு ஒலிம்பிக்ஸிலும் அந்த ஒலிம்பிக் ஜோதி எவ்வாறு ஏற்றப்படும் என்பது கடைசிவரை இரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கும்.

இம்முறை ரியோ டி ஜெனீரோவிலுள்ள மாரக்கானா விளையாட்டு அரங்கில் ஒலிம்பிக் ஜோதி ஏற்றிவைக்கப்படும்.

மேலும் படிக்க