• Download mobile app
28 Nov 2024, ThursdayEdition - 3214
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஒலி மாசு மற்றும் புகையில்லா தீபாவளி

October 10, 2017

தமிழர்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் தீபாவளி பண்டிகையும் ஒன்றாகும். மக்களுக்கு இன்னல்களை கொடுத்து வந்ததாக புராணங்களில் சொல்லப்படும் நரகாசுரனை அழித்த தினத்தை நினைவு கூறும் வகையில் தீபங்களுடன் தீபாவளியினை மக்கள் கொண்டாடிவருகின்றனர்.

தீபாவளி பண்டிகையில் விருந்து மற்றும் இனிப்புடன் சந்தோஷத்தை வெளிப்படுத்த பட்டாசு வெடிப்பது என்பது காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகின்றது.

பண்டிகை மற்றும் விழாக் காலங்களில் பட்டாசுகளை வெடிப்பதால் எழும் ஒலி தற்காலிக செவிட்டுத் தன்மையும், தொடர் ஓசை நிரந்தமான செவிட்டுத் தன்மையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அதிக ஒலி மற்றும் ஒளியுடன் கூடிய பட்டாசுகள் வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசினை தடுக்கும் வண்ணம் பொது நல வழக்கு மாண்புமிகு உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்டது.

இதனை விசாரித்த உச்சநீதிமன்றம்,கடந்த 2005 ஆம் ஆண்டு ஒரு முக்கியமான தீர்ப்பினை வழங்கியது. அதன்படி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகள் வெடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் தயாரிப்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே தக்க விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாண்புமிகு உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

மேலும் இப்பொருள் குறித்து தொடரப்பட்ட மற்றொரு வழக்கில் 28.10.2015 அன்று வழங்கிய உத்திரவில், ஏற்கனவே கடந்த 2005-ல் வழங்கிய உத்திரவினை சரிவர அமல்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஆண்டுதோறும் பொது மக்கள் மற்றும் மாணவ மாணவியர்களுக்கு பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் ஒலி மற்றும் காற்று மாசு குறித்தும், விபத்தில்லா தீபாவளியினை கொண்டாடுவது குறித்தும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றது.

இந்த ஆண்டும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சென்னை மாநகரம் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்த ஏற்பாடு செய்துள்ளது. மேலும் தீபாவளிக்கு முன்தினம் மற்றும் தீபாவளி தினம் ஆகிய இரண்டு நாட்களில் சென்னை, மதுரை, சேலம், திருச்சி, கோயம்புத்துhர், திருநெல்வேலி, திண்டுக்கல், வேலூர், திருப்பூர், ஓசூர் மற்றும் கடலூர் ஆகிய இடங்களில் ஒலி மற்றும் காற்று மாசு அளவீடு செய்வதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் உத்திரவின்படி பட்டாசு உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் பொது மக்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

தயாரிப்பாளர்கள் கடைப்பிடிக்கப்பட வேண்டியவை :-

தயாரிக்கப்படும் பட்டாசுகளில் அடங்கியுள்ள வேதிப்பொருட்கள் மற்றும் ஒலி அளவின் விவரத்தினை பட்டாசு பேக்கிங் பெட்டியில் குறிப்பிட வேண்டும்.

பட்டாசு வெடிக்கும் பொழுது ஏற்படும் ஒலி அளவானது நான்கு மீட்டர் துரத்தில் 125 டெசிபல் அல்லது 145 டெசிபல்க்கு அதிகமாக ஏற்படுத்துடம் பட்டாசுகளை தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது.

சரவெடிகளை பொருத்தமட்டில், அவை வெடிக்கும் பொழுது ஏற்படும் ஒலி அளவானது மேலே குறிப்பிட்ட அளவிலிருந்து குறைத்து கணக்கிடப்பட்டு அந்த அளவிற்குள் இருக்க வேண்டும்

சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் கடைக்காரர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை :-

125 டெசிபல் அளவிற்கு மேல் ஒலி எழுப்பும் பட்டாசுகளை விற்பனை செய்யக் கூடாது. மாண்புமிகு உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தயாரிக்கப்படாத பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது.

பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டியவை :-

இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை கண்டிப்பாக வெடிக்கக் கூடாது.

125 டெசிபல் அளவிற்கு கீழ் ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை மட்டுமே வாங்க வேண்டும்
தீபாவளி பண்டிகை குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் குடும்பத்திருவிழா. அதனால் மக்கள் அனைவரும் அவரவர் குடும்பம், நண்பர்கள் மற்றும் அண்டை அயலாருடன் பாதுகாப்பாகவும் ஒலி மற்றும் காற்று மாசற்ற சுற்றுச்சூழலுக்குகந்த தீபாவளியினைக் கொண்டாடவும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கேட்டுக்கொள்கிறது.

ஒலி மற்றும் காற்று மாசு ஏற்படுத்தும் பட்டாசு வகைகளைத் தவிர்த்து வண்ண ஒளி தீபங்களால் தீபாவளியை அனைவரும் சிறப்பாகக் கொண்டாடுவோம்.

மேலும் படிக்க