• Download mobile app
22 Nov 2024, FridayEdition - 3208
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஒவ்வொரு 1 லட்சம் பெண்களில் 28.2 பேர் மார்பக புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர் – டாக்டர். P. குகன்

October 1, 2024 தண்டோரா குழு

ஸ்ரீ ராமகிருஷ் ணா மருத்துவமனை,ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை & ஆராய்ச்சி மையம் சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த விழிப்புணர்வை ஊக்குவிக்கும் வகையில் தனித்துவமான டிஜிட்டல் உறுதிமொழி பிரச்சாரம் துவங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை – ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை & ஆராய்ச்சி மையம் (SRIOR) அக்டோபர் 1, 2024 முதல் உலக மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தைக் அனுசரிக்கிறது.

இதன் ஒரு பகுதியாக,மக்கள் மத்தியில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வை ஊக்குவிக்க ஒரு தனித்துவமான டிஜிட்டல் உறுதிமொழி பிரச்சாரத்தை ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளில் பிரத்யேக இணையதளம் மூலம் SRIOR தொடங்கியுள்ளது.

இந்த பிரச்சாரத்தின் அறிமுக நிகழ்வில் ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை & ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் டாக்டர். P. குகன், தற்போதைய சூழ்நிலையில் மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தை பற்றி பேசினார்.

மேலும்,அவர் கூறியதாவது:-

மார்பக புற்றுநோய் இந்தியாவில் நகர்ப்புறங்களில் உள்ள பெண்களிடையே மிகவும் பொதுவான புற்றுநோயாக உள்ளது. ஒவ்வொரு 1 லட்சம் பெண்களில் 28.2 பேர் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை, கோயம்புத்தூர் மற்றும் திருவனந்தபுரம் போன்ற நகரங்களில்,இந்த புற்றுநோயே அதிகம் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோயாக உள்ளது.இந்த பகுதிகளில் நன்கு படித்த மக்களிடையே கூட மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு குறைவாக உள்ளது.

இவர்களில் பலரும் மார்பக புற்றுநோயின் மேம்பட்ட நிலைகளில் (நிலை 3 அல்லது 4) தான் சிகிச்சைக்காக வருகின்றனர். இது போன்ற சமயங்களில்,நோயை குணப்படுத்தக்கூடிய சிகிச்சையை வழங்குவதை விட மரணத்தை தாமதப்படுத்தும் நடவடிக்கைகளை தான் எடுக்கக்கூடிய சூழல் எழுகிறது.பெண்கள் பலரிடமும், மார்பகப் புற்றுநோயை உள்ளது என தெரியவந்தால் அதனால் உடனேயே உயிரிழப்பு தான் ஏற்படும் அல்லது மார்பகத்தை இழக்க வேண்டிய சூழல் தான் ஏற்படும் என்ற எண்ணம் உள்ளது. ஆனால் அதை அவ்வாறு எடுத்துக் கொள்ள வேண்டியது தேவையற்ற ஒன்று என டாக்டர் குகன் கூறினார்.

“முன்கூட்டியே கண்டறியப்பட்டால், முழு மார்பகத்தையும் அகற்றாமல் அல்லது கீமோதெரபி அல்லது கதிர்வீச்சுக்கு உட்படுத்தப்படாமல், அறுவை சிகிச்சை மற்றும் மருந்துகள் மூலமாகவே இந்த நோயை குணப்படுத்த முடியும். அதனால்தான், உலகின் பிற பகுதிகளைப் போலவே, SRIORல் உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை நாங்கள் கடைப்பிடித்து, முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம்,” என அவர் கூறினார்.

இந்த டிஜிட்டல் உறுதிமொழி பிரச்சாரத்தை எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் R. சுந்தர் முன்னிலையில் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை இயக்க அதிகாரி சுவாதி ரோஹித் தொடங்கி வைத்தார்.

எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி C. V. ராம்குமார்; ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் s.ராஜகோபால், மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் s.அழகப்பன், SRIORன் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். கே. கார்த்திக்கேஷ் மற்றும் பல முக்கிய விருந்தினர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

2024 உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்திற்க்கான உலக சுகாதார நிறுவனத்தின் கருப்பொருளான “மார்பக புற்றுநோயை யாரும் தனியாக எதிர்கொள்ளக்கூடாது” என்ற செய்தியுடன் ஒன்றாக அமையும்படி SRIORன் டிஜிட்டல் உறுதிமொழி பிரச்சாரம் அமைந்தது. இந்த பிரச்சாரத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள பிரத்தியேக இணையதளத்தில், SRIORல் ஏற்கனவே அறிமுகமாகி நல்ல வரவேற்பைப் பெற்ற மார்பக புற்றுநோய் பற்றிய டிஜிட்டல் விழிப்புணர்வு தொகுப்புகள் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முதலில், இந்த பிரச்சாரம் மூலம் சமுதாயத்தில் புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்துவேன் என்ற உறுதிமொழியை எடுக்க, மக்கள் https://mhits.in/SRIOR/breast_cancer_2024/ என்ற இணையதளத்திற்கு அல்லது இதற்கான பிரத்தியேக QR குறியீட்டை ஸ்கேன் செய்யலாம்.

இந்த இணையதளத்தில் முகப்பு பக்கத்தை அடைந்ததும், அவர்கள் முதலில் தங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுத்து, பின்னர் உறுதிமொழி எடுக்க வேண்டும். அதன் பிறகு அவர்கள் தங்கள் பெயர் மற்றும் புகைப்படத்தை பதிவேற்றலாம். அவ்வாறு செய்தபின் தான் உறுதிமொழி எடுதிகொண்டதை தாங்கள் மொபைல் அல்லது கணினியில் படமாக பதிவிறக்கம் செய்யமுடியும்.

SRIOR ன் இந்த பிரச்சாரத்தில் பங்கேற்கும் மக்கள் அனைவரும் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமான அக்டோபர் மாதம் முழுவதும் தங்கள் வாட்ஸ்அப் செயலியில் மேலே பதிவிறக்கம் செய்த படத்தை தங்கள் வாட்ஸ்அப் காட்சிப் படமாக அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறது. மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை அதிகப்படியான மக்களுக்கு எடுத்து செல்லவும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு துணையாக மக்கள் இருக்கின்றோம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தவும் இந்த முயற்சியில் மக்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் SRIORன் நோக்கம். மேலும் இந்த ஆண்டு, SRIORல் ஏற்கனவே அறிமுகமாகி நல்ல வரவேற்பைப் பெற்ற மார்பக புற்றுநோய் பற்றிய டிஜிட்டல் விழிப்புணர்வு தொகுப்புகள் இணைக்கப்பட்டுள்ளது. இதை அணுக, இந்தப் பிரச்சாரத்திற்கான இணையதளத்தில் முதல் பக்கத்தின் கீழ் இடது பக்கத்தில் உள்ள ‘மேலும் தெரிந்துகொள்ள’ என்ற தலைப்பு கொண்ட பகுதியைக் கிளிக் செய்ய வேண்டும்.

அதன் பின், மக்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் தங்களுக்கான மொழியை தேர்ந்தெடுத்து, மார்பக புற்றுநோய் பற்றி அனைத்து விவரங்களையும், எழுத்து, ஆடியோ மற்றும் வீடியோ வடிவங்களில் பெற்று கொள்ள SRIOR முன்பு உருவாகியிருந்த பிரத்தியேக இணையதளங்களை ஒரே இடத்தில் இருந்து அணுக முடியும்.

மேலும் இதை மிக எளிமையாக மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ளவும் முடியும். இதில் மார்பக புற்றுநோய்யின் அறிகுறிகள், காரணங்கள் மற்றும் சிகிச்சை முறைகள் உட்பட மார்பக புற்றுநோயின் அனைத்து முக்கிய தகவல்களும் இடம்பெற்றுள்ளன.உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு இம்மாதம் முழுவதும், SRIORல் அனைத்து வேலை நாட்களிலும், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, இலவச மார்பகப் புற்றுநோய் பரிசோதனைகள் மற்றும் தேவைப்படும் பெண்களுக்கு மேமோகிராம் பரிசோதனை வழங்கப்படும் என டாக்டர் குகன் தெரிவித்தார்.

இறுதியாக டாக்டர் கார்த்திகேஷ் நன்றியுரை வழங்கினார்.

மேலும் படிக்க