November 4, 2023 தண்டோரா குழு
மின்சார வாகன தயாரிப்பு நிறுவனங்களில் புதுமையான கண்டுபிடிப்புகளின் முன்னோடி நிறுவனமாக திகழும் ஓசோடெக், தனது புதிய வாகனத்தை பரிசோதனை ஓட்டத்தை நடத்தியது.
சர்வதேச அளவில் உள்ள வாகனங்களை விட, 10 கிலோவாட் மின்திறன் கொண்ட பேட்டரியில், 515 கி.மீ.,வரை செல்லும் திறன் கொண்டதாக இது இருக்கும். இந்த ஓசோடெக் வாகனத்துக்கான முன்பதிவு ஷோரூம், மற்றும் அதிகாரப்பூர்வ இணையத்திலும் துவங்கப்பட்டுள்ளது.
ஓசோடெக் பீம் மின்சார வாகனம், தற்போது சந்தையில் உள்ள மின்சார வாகனத்தில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வாக பல சிறப்பம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 10 கிலோவாட் அவர் பேட்டரி திறன் கொண்ட இந்த வாகனம், ஒரு முறை சார்ஜ் செய்தால் 515 கி.மீ.,துாரம் வரை செல்லும் திறன் கொண்டது. நீண்ட துாரத்திற்கு உற்ற நண்பனாக திகழும். இதன் குழாய் அமைப்பிலான கட்டமைப்பு, வாகனத்தின் நீண்ட ஆயுளுடன், மலைப்பகுதியிலும் உறுதியுடன் செயல்படும். கூடுதலாக ஐபி67 மதிப்பீடு, 3 கிலோவாட் மோட்டார் பல்வேறு மேடுபள்ளங்களிலும் கூடுதல் திறனுடன் எளிதாக செயல்படும். ஐபி67 (IP67), பேட்டரி பேக், அலுமினியம் பிரஷர் டை காஸ்ட் வடிவமைப்பில், ஸ்மார்ட் பேட்டரி மேலாண்மையையும் கொண்டது.
அதிநவீன ஒயர் வெல்டிங் தொழில்நுட்பம், பிற வாகனங்களை விட, பாதுகாப்பு தன்மையை உறுதி செய்கிறது.
இளைஞர்களாக, வேலைக்கு செல்வோராக, விவசாயிகளாக, தொழிலாளர்களாக இருந்தாலும் வாழ்க்கையில் பல்வேறு வகையினருக்கும் நம்பகமான வாகனமாக இது திகழ்கிறது. தேவைக்கு ஏற்ப வாகனத்தை மாற்றி அமைத்துக் கொள்ள வசதிகளையும் உதிரி பாகங்களும் கிடைக்கின்றன.
மொபைல் செயலியுடன் ப்ளு டுத் இணைப்ப இருப்பது வாகனத்திற்கு மேலும் உயர்வினை அளிப்பதோடு, மேம்படுத்தப்பட்ட ஓட்டும் அனுபவத்தையும் தருகிறது. முன்பகுதியில் உள்ள பார்வை பகுதியில் ஜிபிஎஸ், வேகமானி, டிரிப் மீட்டர், போன்றவையும் பேருதவியாக இருக்கும். தற்போதைய தேவையாக உள்ள ஊடக பார்வை, பயண வரலாறு மற்றும் பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு பீம் 7 ஆண்டுகள் வாரண்டியுடன் நிம்மதியை தருவதோடு, வாங்குவதற்கு ஏற்ற நம்பகத்தன்மையையும் தருகிறது.
பீம் வாகனத்தின் விலை, பேம்-2 அமலாக்கத்தின்படி கணக்கீடு செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்கள், சந்தையில் பிற வாகன விலையை ஒப்பீடு செய்து வாங்கலாம். ஆறு மாடல்களில் உள்ள பீம் வாகனத்தின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.65,990 முதல் ரூ.1,99,990 வரை இருக்கும்.
ஓசோடெக் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பரதன் கூறுகையில்,
” தரமான மோட்டார், பம்ப் சென்ட் மற்றும் டெக்ஸ்டைல் நிறுவனத்திற்கு பெயர் பெற்ற கோவையில் நாங்கள் உள்ளோம். புதுமையான கண்டுபிடிப்புகளுடன் சமுதாயத்திற்கு சேவையாற்றும் தொலைநோக்கோடு, இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொழிற்சாலைகளுக்கு கன்ட்ரோல் பேனல்,மோட்டார்கள் உற்பத்தி செய்த அனுபவத்தை பெற்றுள்ளோம். இரண்டு ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் உள்ள 5 மாவட்டங்களில் பிலியோ என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தோம். மகிழ்வான 6000 வாடிக்கையாளர்களை பெற்றோம்.
சந்தையில் நாங்கள் செயல்பட்டபோது, பல எலக்ட்ரிக் வாகனங்களுக்கு தமிழ்நாட்டில் சேவை செய்ய வசதிகள் இல்லை என்பதை அறிந்தோம்.பேட்டரி, மோட்டார், சேஸிஸ் போன்றவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, கவனம் செலுத்த வேண்டும் என்பதை அறிந்தோம். இந்த தேவையை நிறைவேற்றும் விதமாக இந்தியாவிலேயே அனைத்தையும் உருவாக்கும் ஒரு நிறுவனத்தை ஏற்படுத்தினோம். தனி ஒரு வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ற அனைத்து சிறப்பம்சங்களும் கொண்ட நிறுவனமாக பீம் உள்ளது,” என்றார்.