July 25, 2023 தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் பல்வேறு அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வூதியப் பலன்கள் இதுவரை கிடைக்கப் பெறாமல் இருப்பின் அதைப்பற்றி விவரங்கள்,பணியாற்றிய அரசுதுறை மற்றும் எந்த அலுவலர் மூலம் குறை நிவர்த்தி செய்யப்பட வேண்டும் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிட்டு ஓய்வூதிய குறைதீர்ப்பு மாதிரிப் படிவத்தில் பூர்த்தி செய்து இரட்டை பிரதிகளில் கலெக்டருக்கு அடுத்த மாதம் 4ம் தேதிக்குள் கிடைக்கும் படியாக நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ அனுப்ப வேண்டும்.
ஓய்வூதிய குறை பற்றி மனு அனுப்ப வேண்டிய மாதிரிப்படிவத்தில் பெயர் மற்றும் முகவரி, பி.பி.ஓ.எண், ஓய்வுபெற்ற நாள், கடைசியாக வகித்த பதவி மற்றும் துறை, குறைகள் விவரம் குறித்து தனித்தாளில் விரிவாக எழுதி படிவத்துடன் இணைக்க வேண்டும், முந்தைய தகவல் ஏதும் இருப்பின் விவரம், இதுதொடர்பாக வழக்கு ஏதும் தொடர்ந்திருந்தால் அதன் விவரம், குறைகளை நிவர்த்தி செய்யவேண்டிய அலுவலகம் மற்றும் அலுவலர் விவரம் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்.
ஓய்வூதிய குறைதீர்ப்பு கூட்டம் வரும் 30ம் தேதி காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலகம், மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. இந்த நேர்முகக் கூட்டத்தில் கலந்துகொண்டு பயனடையுமாறு ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களை என ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கேட்டுக்கொண்டுள்ளார்.