July 22, 2017
தண்டோரா குழு
பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் உள்ள ஓவியாவுக்கு ரசிகர்கள் மற்றுமின்றி பல பிரபலங்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
தனியார் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்நிலையில், மற்ற பிரபலங்கள் ஓவியாவை புறக்கணிப்பது போன்று பேசி வருகின்றனர். இதனால், சமூக வலைதளங்களில் ஓவியாவிற்கு பலர் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனார்.
இந்நிலையில், ஓவியாவை ஓரம்கட்ட மற்ற போட்டியாளர்கள் செய்வது பற்றி நடிகர் சிம்பு ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், “ஒருவர் மற்றவர்களை போல இல்லாமல், வித்யாசமாக இருந்தால், அவரை குறை சொல்லி ஓரம்கட்டமால் விட்டுவிடுவது தான் நல்லது” என கூறியுள்ளார்.