December 21, 2022 தண்டோரா குழு
கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள கங்கா நர்சிங் கல்லூரி வளாகத்தில், இக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா 21 டிசம்பர் 2022 அன்று வெகுவிமர்சிகையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்கள் அழகான மாலை ஏந்திய மாணவர்களின் அணிவகுப்புடனான சிவப்பு கம்பள ஊர்வலம் மூலம் கௌரவிக்கப்பட்டனர்.
கோவை கங்கா மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ராஜா சபாபதி வரவேற்புரையாற்றினார். இப்பட்டமளிப்பு விழாவிற்கு பட்டிமன்ற ராஜா என்று பிரபலமாக அறியப்படும் சிம்சன் ராஜா சிறப்பு விருந்தினராகவும், டாக்டர் ஏஞ்சலா ஞானதுரை (திருச்சூர் ஜூபிலி மிஷன் நர்சிங் கல்லூரி முதல்வர்) கௌரவ விருந்தினராகவும், அழைக்கப்பட்டிருந்தனர்.
ராமா ராஜசேகரன் -அறங்காவலர், GIHS கங்கா கல்லூரியின் வளர்ச்சி பாதையை பற்றி விவரித்தார்.Dr. எஸ்தர் ஜான் – கல்லுரி முதல்வர் புளோரன்ஸ் நைட்டிங்கேல் உறுதிமொழியை உரைக்க சுமார் 70 செவிலிய மாணவ மாணவிகள் ஏற்றுரைத்தனர். Dr.பாலவேங்கடசுப்பிரமணியன்- கங்கா மருத்துவமனையின் கல்வி இயக்குநர் பட்டமளிப்பு உறுதிமொழியை முன்மொழிய , அதைத் தொடர்ந்து சுமார் 700 பட்டதாரிகள் கௌரவ ஆடை அணிந்து தொழில்முறை அர்ப்பணிப்புடன் உறுதிபூண்ட பின்னர் சிறப்பு விருந்தினர்களால் பட்டமளிப்பு உபகரணங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
சிறந்த பட்டதாரிகளுக்கு புலமை விருதுகள் அளித்து ஊக்குவிக்கப்பட்டனர். கங்கா மருத்துவமனையின் நிறுவனர் ஜெ ஜி சண்முகநாதன் இந்நிறுவனத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த பேராசியர் மற்றும் ஊழியர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கி ஊக்குவித்தார்.
முதலாம் ஆண்டு மாணக்கர்களுக்கான விளக்கு ஏற்றும் விழா
பிஎஸ்சி நர்சிங் மற்றும் செவிலிய பட்டய படிப்பில் இணையும் முதலாம் ஆண்டு மாணக்கர்களுக்கான விளக்கு ஏற்றும் விழா 21 டிசம்பர் 2022 அன்று சிறப்பாக நடைபெற்றது.
இவ்விளக்கேற்றும் விழா இன்னுரும் நோயாளிகளின் வாழ்வில் செவிலியர்கள் தங்களது செவிலிய பணிகள் மூலமாய் விளக்கேற்றுவதை அடையாளப்படுத்துகின்றது. கௌரவ விருந்தினர் மற்றும் பேராசிரியர்கள் இம்மாணவர்கள் விளக்கை ஏற்றிவைத்தனர் Dr. எஸ்தர் ஜான் – கங்கா கல்லுரி முதல்வர் அவர்கள் புளோரன்ஸ் நைட்டிங்கேல் உறுதிமொழியை உரைக்க சுமார் 70 செவிலிய மாணவ மாணவிகள் ஏற்றுரைத்து தங்களை இவ்வுன்னத பணிக்கு அர்ப்பணித்து கொண்டனர்.
அதைத் தொடர்ந்து, Dr. ராஜா சண்முக கிருஷ்ணன்- கங்கா மருத்துவமனை, மார்பக மற்றும் ஆன்கோபிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, ஆலோசகர் தலைமையில், 80-க்கும் மேற்பட்ட துணை சுகாதார அறிவியல் மாணவர்கள் தங்கள் தொழிலில் கடமைகளைச் செய்வதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
கௌரவ விருந்தினர் தனது உரையில் இம்மாணவர்களை பாராட்டி, உறுதியுடன் இருக்கவும், சரியான அணுகுமுறையைக் கொண்டிருக்கவும், தன்னலமற்ற சேவையை வலியுறுத்தி, மாறிவரும் போக்குகள் மற்றும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செவிலியர்கள் தங்கள் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இப்பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினர் ராஜா இவ்விளம் பட்டதாரிகளிடையே பல்வேறு சமூக பகுதிகள் குறித்த தகவல்களை வெளிச்சமிட்டு , நகைச்சுவையான சிந்தனையைத் தூண்டும் விதத்தில் உரையையாற்றினார்.
அலங்கார விளக்குக்களுடனான மாளிகையரங்கம் , மலர் தோட்டம், அழகான மாலை ஏந்திய மாணவர்களின் அணிவகுப்பு , புளோரன்ஸ் நைட்டிங்கேலின் “தி லேடி வித் லாம்ப்” நேரடி மாடல் ஆகியவை இம்மங்களகரமான விழாவின் நறுமணத்தை அதிகரித்தன.