December 15, 2017 தண்டோரா குழு
கங்கை நதி கரையில் அமைந்துள்ள ஹரிட்வார், ரிஷிகேஷ் போன்ற இடங்களில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் தடைவித்துள்ளது.
வட இந்தியாவில் உள்ள ரிஷிகேஷ், ஹரித்துவார் போன்ற புனித தளங்கள் கங்கை நதி கரையில் அமைந்துள்ளது. அங்கு வரும் சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களால் கங்கை நதி மாசு அடைந்து வருகிறது. இதை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், கங்கை நதி கரையில் அமைத்துள்ள ரிஷிகேஷ், ஹரித்துவார் உள்ளிட்ட அனைத்து நகரங்களில் பிளாஸ்டிக் பை, தட்டுகள், போன்றவற்றை பயன்படுத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் தடைவித்துள்ளது. மேலும், உட்டர்காசி வரை பிளாஸ்டிக் பொருள்களை விற்கவோ, தயாரிக்கவோ, சேமித்து வைக்கவோ கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறுவோருக்கு 5,௦௦௦ ரூபாய் அபராதமும், கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. சுற்றுசூழல் ஆர்வலர் எம்.சி. மேத்தா பதிவு செய்த வழக்கிற்கு பிறகு, தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.