May 19, 2022 தண்டோரா குழு
கடுகுசிறுத்தாலும் காரம் குறையாது என்ற பழமொழி ஒருபக்கம் இருந்தாலும் 0.05 டைகிராம் கொண்ட கடுகில் ஈரோடு ரயில்வே காலனி சேர்ந்த வெங்கடேஷ் என்ற ஒவியர் கோவையில் பல்வேறு நிகழ்வில் கலந்து கொள்ள வரும் முதல்வர் ஸ்டாலினுக்கு பரிசாக தர இவ்ஒவியத்தை உருவாகி இருக்கிறார்.
மேலும்,ஸ்டாலின் வாழ்கை கதை சுருக்கம் செய்து அந்த கதையினை எழுத்து வடிவங்களில் ஒரு அடி அளவில் வரைந்திருந்தார். மேலும் ஓவியங்கள் வழியே வரலாறு வரைப்படும் போது காலம் முழுவதும் பேசும் பொருளாக உயிர்பித்து இருக்கும் அந்த வகையில் முதல்வரின் படத்தை ஒரே நாளில் கடுகிலும், வெள்ளை தாளிலும் படம் வரைந்து அவருக்கு பரிசாக தர இருப்பதாகவும் இது ஒவிகலையின் மற்றொரு பரினாமாகவும் இருக்கும் என்பதில் ஐயப்பாடு இல்லை திறமைகளை ஊக்க படுத்தும் முதல்வர் ஒவியரின் கைவண்ணத்தை ரசித்து பார்த்து பாராட்டினார்.