December 12, 2022
தண்டோரா குழு
கோயம்புத்தூர் அவிநாசி ரோடு விரியம் பாளையம் சாலையில் பிரைடல் ஸ்டுடியோ நூறு திறப்பு விழா நடைபெற்றது.பிரைடல் ஸ்டுடியோவை நடிகரும் பிரபல தொழிலதிபருமான லெஜென்ட் சரவணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மணப்பெண்களுக்கான நவீன மேக்கப் சாதனங்களை பார்வையிட்டார்.
திறப்பு விழாவில் பங்கேற்க வந்த நடிகர் சரவணன் பிரைடல் மேக்கப் நிறுவனத்தின் உரிமையாளர் நூறு வரவேற்றார்.அவருடன் ரசிகர்களும் வரவேற்பளித்தனர்.நிகழ்ச்சியில் லெஜன்ட் சரவணன் நடிகர் ரோபோ சங்கர் அப்புகுட்டி மற்றும் மக்கள் தொடர்பாளர் நிகில்முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் பேசிய சரவணன்,
கோவையில் கலை ரசனை உள்ளவர்கள் அவர்களுக்காக பிரைடல் மேக்கப் நூறு நிறுவனத்தை நூர் முகமது துவக்கி வைத்துள்ளார்.அவருடைய கடினமான உழைப்பு பாராட்ட தகுந்தது.பொதுவாக நான் கடுமையாக உழைப்பவர்களை தொழிலை நேசிப்பவர்களை நான் நேசிப்பேன் எனக்கு பல்வேறு நிகழ்வுகளுக்கு அழைப்புகள் இருந்தாலும் பெரும்பாலான நிகழ்வுகளுக்கு செல்வதில்லை.
ஆனால் கலைத்துறையாளர்களுக்கு மேக்கப் துறை முக்கியம் பங்கு வைக்கிறது.அவற்றை முழுமையாக நேசித்து சேவை செய்து வருகிறார் நூறு முஹம்மது. அவருடைய அன்பால் ஈர்க்கப்பட்டு அவருடைய கடின உழைப்பை நேசித்து இந்த நிகழ்வுக்கு வந்துள்ளேன் மகிழ்ச்சி அளிக்கிறது.கோவை மக்களுக்கும் நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று நடிகர் லெஜென்ட் சரவணன் கூறினார்.