November 2, 2022 தண்டோரா குழு
தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்க (டாக்ட்) கோவை மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறியிருப்பதாவது:
தமிழகத்தின் குறிந்தொழில் நிறுவனங்கள் பிற மாநிலங்களுடன் போட்டி போட முடியாமல் தொடர்ந்து கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளாக முன்னேற்றமும் இல்லாமல் பெரும்பாலான குறுந்தொழில்களில் மூடும் நிலையில் உள்ளன. கோவையில் தொழில் அடையாளங்கள் பெரும் பாதிப்புக்க உள்ளாக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக பம்பு, வெட்கிரைண்டர் உற்பத்தியில் தனி சிறப்புடன் இயங்கி வந்த தொழில் நகரமான கோவை இன்று பின்னுக்கு தள்ளப்பட்டு தன் உற்பத்தியில் 50 சதவீதம் வரை குறைந்துள்ளது. குஜராத் மாநிலத்தில் பம்பு உற்பத்தி அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு நாடு முழுவதும் 20 சதவீதம் நம்மைவிட குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனால் கோவையின் பம்பு உற்பத்தி கடுமையாக பாதித்ததுடன் குறிப்பாக ஜாப் ஆர்டர்கள் செய்து வந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறுந்தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து ஆடர்கள் இல்லாமல் செயல் இழந்து நிற்கின்றன.
இந்நிலையில் பெரும் அதிர்ச்சியாக தொழில் துறையின் மேல் மின் கட்டணம் ஐம்பது சதவீதத்திற்கும் மேல் உயர்த்தியதால் தொழில் செய்வதே வீண் என்கின்ற அளவிற்க்கு மிக பெரும் சுமையாக மின்கட்டணம் உயர்த்தபட்டுள்ளது. எங்களின் நிலை உணர்ந்து தமிழக முதல்வர் உயர்த்திய மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். மின் கட்டண உயர்வு சம்மந்தமாக கோவையில் இருக்கும் தொழில் அமைப்புகள் ஒரு சில தினங்களில் கூடி பேசி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.