January 27, 2017
தண்டோரா குழு
ஆப்கானிஸ்தான் நாட்டில் நிலவும் கடும்குளிரால் 27 குழந்தைகள் உயிரிழந்தனர்.
இது குறித்து ஆப்கானிஸ்தான் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
“கடும் பனிப்பொழிவு மற்றும் உறைக்கும் குளிரால் 5 வயதுக்கு கீழ் உள்ள 27 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இறப்பின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சுகிறோம்” என்றார்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள வட ஜஸ்ஜன் மாகணத்தின் தர்ஜாப் என்னும் இடத்தில் உள்ள சாலைகள் பனியால் மூடப்பட்டுள்ளன. சாலைகளின் மீது 50 செ.மீ. உயரத்திற்கு பனி படிந்துள்ளது. இதனால், அதனை சுற்றயுள்ள கிராமங்களில் இயல்பு வாழ்க்கை அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.
வெப்ப அளவு மைனஸ் 10 டிகிரி செல்சியஸ் அளவுக்கு கடுமையாகக் குறைந்துவிட்டது.
மாவட்ட ஆளுநர் ரஹ்மத்துல்லாஹ் ஹஸர் கூறுகையில்,
“கடந்த இரண்டு அல்லது மூன்று நாட்களாகத் தொடரும் மரணங்கள் அதிக வேதனையை தருகிறது. இந்த கடும் பனிப்பொழிவால் 5 வயதுக்கு கீழ் உள்ள 27 குழந்தைகள் உயிரிழந்தனர்.
ஜஸ்ஜன் மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளர், ரீஸா கஃபூரி கூறுகையில், “அவசர கால குழு மூலம் அணைத்து உதவிகளும் வழக்கப்படும்” என்றார்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் ஒவ்வொரு பனிக்காலத்தின் போது, கடும் பனிப்பொழிவும், பனிச்சரிவும் ஏற்படுவதால் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர்.
கடந்த 2௦15ம் ஆண்டு வட காபூலில் உள்ள பஞ்ச்ஷிர் மாகணத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் 3௦௦ பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.