• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கடைசி தொழிற்சாலையையும் மூடியது எச்.எம்.டி.

May 4, 2016 தண்டோரா குழு

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கைகடிகரங்களில் பழமை வாய்ந்ததும் மக்களால் அதிகமாக விரும்பப்பட்டதுமான நிறுவனம் ஹிந்துஸ்தான் மெசின் டூல்ஸ் பிரைவேட் லிமிடெட் (HMT) ஆகும்.

கடிகாரம் என்பது வட்டமாகத்தான் இருக்க வேண்டும் என்ற விதியை மாற்றி சதுரமாக செய்து இந்தியாவில் சாதனை படித்ததும் இந்த எச்.எம்.டி நிறுவனம் தான்.

இந்தப் பிரபலமான நிறுவனம் சர்வதேச உழைப்பாளர் தினமான மே 1 ல் கர்நாடக மாநிலத்தில் தும்கூரில் உள்ள அதனுடைய கடைசி தொழிற்சாலையின் கதவுகளை முழுமையாக மூடிவிட்டது.

இத்தனை ஆண்டுகள் தாங்கள் பணிபுரிந்த தொழிற்சாலை இப்பொழுது மூடப்படுவதைக் கண்ட தொழிலார்கள் வேதனை அடைந்தார்கள். தங்கள் பணியிடத்திற்கு இறுதியாக விடைகொடுத்து சென்ற HMT தொழிலாளர்கள் மத்தியில் துக்கம் நிறைந்து இருந்தது.

சங்கம், உத்சவ், எலீகன்ஸ் மற்றும் பைலட் போன்ற வகைக் குறிகளை வடிவமைத்துத் தயாரித்து தனக்கு என்று ஒரு தனி முத்திரையைப் பதித்தது HMT நிறுவனம். மேலும், சுமார் 120 தொழிலார்களை பணியில் கொண்டு தங்களுடைய கடைசி தயாரிப்பை முடித்து.

HMT சினார் கடிகாரங்கள் லிமிடெட் மற்றும் HMT தாங்கு உருளைகள் லிமிடெட்களுடன் சேர்ந்து HMT கைக்கடிகாரங்கள் தொழிற்சாலைகள் மூடப்படும் என்று பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு இந்த ஆண்டின் ஜனவரி மாதத்திலேயே இந்த அறிக்கை வெளியிட்டனர்.

மேலும், தொழிற்சாலைகளை மூடுவதற்கு தங்கள் தான் காரணம் என்றும், இழப்புக்கள் ஆரம்பிக்கும் போதே அதனைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. அரசாங்கமும் தொழிற்சாலையை புதுப்பிக்க உதவி செய்யாமல் அதற்குக் கடன் உதவி செய்தது என்று தொழிலாளர்கள் சங்க பொதுச் செயலாளர், எஸ் சந்திரசேகர் ஐயா தெரிவித்தார்.

ஓர் ஆண்டிற்கு மேல் அவர்களுக்குக் கிடைக்கும் சம்பளமும் நிலுவையும் முழுமையா கிடைப்பதால் தொழிற்சாலை மூடப்பட்டாலும் தொழிலார்கள் சிலர் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.

மேலும், கர்நாடக மாநிலத்தில் உள்ள தும்கூர் தொழிற்சாலையைச் சேர்த்து மூன்று தொழிற்சாலைகள் மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையும் ஒரே நாளில் மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க