November 25, 2017 தண்டோரா குழு
புதுதில்லியின் மெட்ரோ ரயில் கட்டணம் அதிகரித்துள்ளதால், சுமார் 3 லட்சம் பயணிகள் ரயிலில் பயணிப்பதை தவிர்த்துள்ளனர்.
புதுதில்லியில் பணிக்கு செல்லும் பலர், தங்கள் பணியிடங்களுக்கு விரைந்து செல்ல மெட்ரோ ரயில் சேவையைபயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் முதல் ரயில் கட்டணம் அதிகரிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த செப்டம்பர் மாதத்தில் தினசரி சுமார் 27.4 லட்சம் பேர் ரயிலில் பயணித்தனர். ஆனால், கடந்த அக்டோபர் மாதத்தில் சுமார் 11 சதவீதம் குறைந்து, 24.2 லட்சம் மக்கள் மட்டுமே ரயிலில் பயணம் செய்தனர்.
டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் (டி.எம்.ஆர்.சி) வெளியிட்டுள்ள தகவல்களின்படி, “மெட்ரோவின் பரபரப்பான ரயில் என்று கருதப்படும் ‘ப்ளூ லைன்’,சுமார் 30 லட்சம் பயணிகளை இழந்துள்ளது. இந்த ரயில் துவார்கா-நொய்டாவை இணைக்கிறது. அதேபோல், புதுதில்லியின் வடக்கில் உள்ள சமயபூர் பாட்லி-குர்கானை இணைக்கும், மஞ்சள் லைன்’ மெட்ரோ ரயில், சுமார் 19 லட்சத்துக்கும் மேலான பயணிகளை இழந்துள்ளது” என்று தெரிவித்துள்ளது.