• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கட்டுமான துறை வளர்ச்சிக்கு அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வருக்கு நன்றி தெரிவிக்க திருச்சியில் மாநாடு

June 16, 2022 தண்டோரா குழு

கட்டுமான துறையை ஊக்கபடுத்தும் விதமாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக திருச்சியில் மாநில அளவிலான மாநாடு நடைபெற உள்ளதாக, கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்.குமார் கோவையில் தெரிவித்துள்ளார்.

கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் கூட்டமைப்பு கோவை மாவட்டம் சார்பாக ஆலோசனை கூட்டம்,உக்கடம் சுங்கம் பைபாஸ் சாலையில் உள்ள ஆர்.ஜே.மகாலில் நடைபெற்றது.கூட்டமைப்பின் மாநில துணைத் தலைவர் ராஜேந்திரன்,மற்றும் மாநில நிர்வாகிகள் இராம.வெங்கடேசன், பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாவட்ட தலைவர் ஜி.முகம்மது ரபீக், முன்னிலை வகித்தார்.சிறப்பு அழைப்பாளராக கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்.குமார் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர்,திருச்சியில் நடைபெற உள்ள மாநில மாநாட்டை சிறப்பாக நடத்த கூட்டமைப்பு நிர்வாகிகள் பணியாற்ற வேண்டும் எனவும்,இந்த மாநாடு கட்டுமான துறையில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடத்தப்படுவதாகவும்,குறிப்பாக, விரைவாக கட்டடங்கள் கட்டுவதற்கு மனைப் பிரிவுகள் மற்றும் மனைகளுக்கு 60 நாட்களுக்குள் அனுமதி வழங்க ஒற்றைச் சாளரமுறையை அறிமுக படுத்தியதற்காகவும்,

மேலும் பேக்கேஜ் டெண்டர் முறையை ரத்து செய்ததால் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாகவும், மணல் குவாரிகளை திறந்து மணல் தட்டுப்பாடுகள் இன்றி கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், கூறிய அவர்,இப்படி தமிழக முதல்வர் கட்டுமான துறை வளர்ச்சிக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுதால் வேலை வாய்ப்புகள் அதிகரித்து நல்ல வளர்ச்சியை நோக்கி முன்னேறி வருவதாக தெரிவித்தார்.

அந்த வகையில் கட்டுமான துறை வளர்ச்சிக்கு அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வருக்கு நன்றி தெரிவிக்க திருச்சியில் மாநாடு நடத்தபடுவதாக அவர் தெரிவித்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில், மாவட்ட தலைவர்கள் சந்திரசேகரன் கணேஷ் ராஜதுரை அய்யாசாமி ரஜினிகாந்த் மற்றும் நிர்வாகிகள் அழகேசன் ஜெகதீசன் மயில்சாமி ஸ்ரீதர் ராமச்சந்திரன் சசிதரன் நாகசுந்தரம் சந்தானகிருஷ்ணன் மயில்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க