• Download mobile app
28 Nov 2024, ThursdayEdition - 3214
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கட்டுமான தொழில் சார்ந்த பொருட்களின் பயன்பாடுகளை குறைக்க புதிய துவக்கம்

February 16, 2022 தண்டோரா குழு

கட்டுமான தொழில் சார்ந்த பொருட்களின் பயண்பாடுகளை குறைக்கும் வகையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில்,ரெனாகான் எனும் புதிய ஏஏசி நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது.

ஏஏசி ப்ளாக்களை உருவாக்கிவரும் ரெனாகான், புதிய ஏஏசி தொழிற்சாலை,100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஈரோடு மாவட்டம்,பெருந்துறை பகுதியில்,துவங்க உள்ளது எனவும், இதனால் கட்டுமான தொழில், துறையில் பல்வேறு வளர்ச்சிகளை கொண்டு,ரெனாகான் ஏஏசி ப்ளாக்குகள் மூலமாக செலவு களை குறைக்க முடியும் என்று ரெனாடஸ் புரோகான் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குநர் செல்வசுந்தரம் தெரவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கூறியதாவது,

தற்போதைய ஏஏசி ப்ளாக்குகளை அதிகளவில் உற்பத்தி செய்யும்,முண்ணனி நிறுவனமாக ஈரோடு பகுதியில், ரெனாகான், புரேகான் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகின்றது.தற்போது கூடுதலாக 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில் புதிய தொழிற்சாலையை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.

உலகத்தரம் வாய்ந்த தொழில். நுட்பத்தில் இந்தியாவில் அதிக அளவில் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக இது திகழ உள்ளது.தற்போது 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்ற ரெனாகான் தொழிற்சாலை ஆற்காடு மற்றும் திருநெல்வேலியில் தங்களது இரு கிளைகளை கொண்டுள்ளது.தற்போது மூன்றாவது கிளையை பெருந்துறையில் துவங்க உள்ளது.

போக்குவரத்து செலவை பெருமளவு குறைக்க, தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு, கட்டுமான துறையின் சேவையை மேம்படுத்தவும்,இந்நிறுவனம் பெருந்துறையில் துவங்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார்.மேலும்,இதன் மூலமாக தொழிற்சாலைகளில் நேரடியாக, 300 பேருக்கும், 500 பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகள் கிடைக்கும்,என்றார்,

ஏஏசி பிளாக்குகள்,அனைத்தும் ஐஎஸ்ஐ, கிரிஹா, ஐஜிபிசி போன்ற அமைப்புகளின் சான்று பெற்று, பசுமை தயாரிப்பாக உள்ளது, செங்கற்களுக்கு மாற்றாகவும், வளத்தைப் பாதுகாப்பதுடன், செங்கல் தயாரிக்க தேவைபடும் பல டன் விறகுகளை பயன்படுத்துவதையும் இது தவிர்க்கின்றது, எனவும் சாலிட் ப்ளாக்குகள் மற்றும் சாம்பல் கற்களை தவிர்ப்பதோடு, 60 சதவிகித சிமென்ட் பயன்பாட்டை குறைக்க உதவுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க