May 10, 2022
தண்டோரா குழு
மாநகராட்சி வடக்கு மண்டலம் 29வது வார்டுக்குட்பட்ட கணபதிபுதூர் பகுதியில் சுகாதார மையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோவை மாநகராட்சி கணபதி புதூர் பகுதியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் துவக்கி வைத்த சுகாதார மையம் கட்டும் பணியினை மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணியினை விரைவாகவும், தரமானதாகவும், செய்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது வடக்கு மண்டல உதவி கமிஷனர் மோகனசுந்தரி, மண்டல குழு தலைவர் வே.கதிர்வேல், 29-வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி, உதவி செயற்பொறியாளர் செந்தில் பாஸ்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.