March 3, 2016 www.thebetterindia.com
பெங்களூரு பரபரப்பான போக்குவரத்து நெரிசலுக்கு இடையே வளைந்து நெளித்துச் செல்லும் ஆட்டோவைப் பார்ப்பவர்கள் அனைவரும் ஆச்சிரியப்படுவது உறுதி. ஏனென்றால் அந்த ஆட்டோவை ஓட்டுவது 22 வயதேயான கணவனின்றி தனியாக தனது குழந்தையுடன் வாழும் எல்லம்மாள்.
படிக்கும் போது படு சுட்டியாகவும் பரபரப்பாகவும் காணப்பட்ட அவர் தவிர்க முடியாத சூழலில் தனது 18வதி வயதிலேயே பூக்கட்டும் தொழிலாளிக்கு மனைவியாக வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
ஆனால் தற்போது இரண்டு வயது மகனை வைத்துள்ள அவருடன் அவரது கணவர் இல்லை. அதற்காக மனம் வருந்தாத எல்லம்மாள் யாருக்கும் பாரமாக இருக்கக்கூடாது என முடிவெடுத்தார். ஒரு ஆட்டோவை வாடகைக்கு எடுத்து ஓட்டக்கற்றுக்கொண்டார்.
பின்னர் பெங்களூரு சாலைகளில் தற்போது சர்வசாதாரணமாகச் சென்று வருகிறார். முதலில் தான் ஒரு பெண் என்று உதாசீனப்படுத்தி யாரும் ஆட்டோவை வாடகைக்கு வழங்க மறுத்தனர். பின்னர் ஒரு நல்ல மனம் கொண்டவர் நாள் ஒன்றிற்கு 130 ரூபாய் வாடகைக்கு ஆட்டோவைக் கொடுத்தார்.
காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஆடோ ஓட்டும் அவர் சுமார் 900 ரூபாய் வருவாய் ஈட்டுகிறார். அதில் வாடகை மற்றும் எரிபொருள் செலவு போகப் பாதியை மீதி செய்கிறார். இதனிடையே ஓய்வாக இருக்கும் நேரங்களில் பி.யு.சி எனப்படும் பன்னிரண்டாம் வகுப்பு பாடங்களை படித்து வருகிறார்.
இது குறித்து கூறும்போது விரைவில் தான் ஐ.ஏ.எஸ் ஆகி என்னைப்போலக் கஷ்டப்படுபவர்களுக்கு உதவ வேண்டும் எனக் கூறுகிறார். அதைக் கேட்கும் பல வாடிக்கையாளர்கள் தனக்கு 10 முதல் 20 ரூபாய் வரை அதிகமாகக் கொடுப்பதாகவும்,
ஒரு சிலர் புத்தகம் கொடுத்து என் லட்சியத்தில் வெற்றிபெற வாழ்த்தும் தெரிவிக்கின்றனர் எனத் தெரிவித்தார். இரண்டு வயது குழதையை வைத்துக்கொண்டு ஆடோ ஓட்டி ஐ.ஏ.எஸ் ஆகா ஆசைப்படும் எல்லம்மாளின் ஆசை நிறைவேற நாமும் இறைவனை வேண்டுவோம்.