May 19, 2017 தண்டோரா குழு
ரஷ்ய உள்துறை அமைச்சகத்தின் கணினிகளை ரான்சம் வைரஸ் தாக்காமல் இருக்க புனித நீர் தெளிக்கப்பட்டது.
சமீப காலமாக ரான்சம் வைரஸ் சுமார் 15௦ நாடுகளிலுள்ள சுமார் 2.௦௦,௦௦௦ கணினிகளை தாக்கியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலால் சேமித்து வைத்திருக்கும் தகவல்களை முடக்கிவிடும். அந்த தகவல்களை மீண்டும் பெற பணம் செலுத்த வேண்டியிருக்கும். அப்படி பணம் செலுத்தவில்லை என்றால் அந்த தகவல்கள் முழுவதும் அழிக்கப்படும் அபாயமும் உண்டு.
15௦ நாடுகளிலிருக்கும் மருத்துவமனைகள், பள்ளி நிறுவனங்கள், ப்ளூ சிப் போன்ற பெரிய வணிக நிறுவனங்கள், சினிமா அரங்கம் ஆகியவை குறிவைக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலால் ரஷ்ய நாடு அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலிருந்து தப்பிக்க, ரஷ்ய நாட்டின் கிறிஸ்துவ சபை பாதிரியார் கிரில் என்பவரை அழைத்து கணினிகள் மேல் புனித நீரை(holy water) தெளித்து உள்ளனர்.
கணினிகளை தாக்கும் வைரஸ்களிடமிருந்து,புனித நீர் கொண்டு காப்பாற்றுவதற்கு பதிலாக, இன்னொரு முறையை தொழில்நுட்ப நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அது என்னவென்றால், “கணினி வைரஸ் தாக்காமல் இருக்க மென்பொருள்களை மேம்படுத்த வேண்டும். வைரஸ் தடுப்பு மென்பொருள்களை வாங்க வேண்டும். சந்தேகப்படும் படியாக இருக்கும் இ மெயில் அல்லது பாப் அப் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்” என்று தொழில்நுட்ப நிபுணர்கள் தெரிவித்தனர்.