June 9, 2017 தண்டோரா குழு
ஒருவரின் கண்களைப் பார்த்து அவரின் மனநிலையை அறியும் சக்தி ஆண்களைவிட பெண்களுக்கே அதிகம் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஒருவரின் கண்களை பார்த்து அவர் என்ன மனநிலையில் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளும் அபூர்வ சக்தி சிலரிடமே உள்ளது. இது தொடர்பாக இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். உலகம் முழுவதும் உள்ள 89 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. தற்போது அதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
அந்த ஆய்வில் மனிதனின் கண்களை பார்த்து அவரது மனநிலையை அறியும் சக்தி பெண்களுக்கு உண்டு என்பது தெரியவந்துள்ளது. இது ஆச்சரியமான விஷயமே ஆண்களைவிட பெரும்பாலான பெண்களுக்கு தான்இத்தகைய சக்தி அதிகம் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மரபணு மாற்றத்தின் காரணமாக பெண்களுக்கு இத்தகைய சக்தி இருப்பதாக விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.